உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅர்எனச் சேறிஎன் நெஞ்சு! (குறள், 1292) துன்பத்தால் கெட்டு நொந்தவர்களை உலகத்தில் உறவினர்களும் நண்பர்களும் கைவிட்டு ஒதுங்குவார்கள். அதை நினைத்துக்கொள்கிறாள் அவள். காதலனைப் பிரிந்து துன்புற்ற காரணத்தால் நெஞ்சம் மெலிந்துவிட்டது: திக்கற்ற நிலையில் வாடியது. அதனால் காதலனைக் கண்டவுடனே அவருடைய விருப்பப்படி அவர்பின் சென்று விட்டதோ என்று எண்ணிக் கேட்கிறாள். கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல். (குறள், 1293) |