பக்கம் எண் :

18. ஊடல் உரிமை95

18, ஊடல் உரிமை

தன் அன்புக்கு உரிய பொருள் தனக்கே உரியதாக இருக்க
வேண்டும் என்று எண்ணுவது அன்பு நெஞ்சம். குழந்தை தன்னிடமே
அன்பு செலுத்த வேண்டும் என்று தாய் விரும்புகிறாள். நண்பர்கள்
தன்னிடமே நெருங்கிப் பழகவேண்டும் என்று நண்பன் விரும்புகிறான்.
அவ்வாறே கணவனுடைய அன்பு தனக்கு மட்டுமே உரிமையாக
இருக்க வேண்டும் என்று விரும்புவது மனைவியின் இயல்பு. அந்த
உரிமையில் ஏதேனும் குறையோ ஐயமோ ஏற்படும்போது அதற்காகப்
போராடி உரிமையை முழுமையாகப் பெற முயலும் முயற்சியே ஊடல்
எனப்படும். "எனக்கு மட்டுமே உரிமையான உன் நெஞ்சத்தில்
இன்னொருத்திக்கு இடம் தந்துவிட்டீரே?" என்று போராடிப் பழையபடி
முழு உரிமை பெறுவதே ஊடலின் பயனாகும்.

இவ்வாறு மனைவியின் அன்பு முழுமையாகத் தனக்கு வேண்டும்
என்று கணவன் போராடுவது இல்லை. இனி மாறியமையும்
சமுதாயத்தில் ஒருகால் அப்படிப்பட்ட கணவனின் ஊடலுக்கு இடம்
ஏற்பட்டாலும் ஏற்படலாம். இன்று வரையில் இருந்துவரும் பழைய
மரபின்படி அந்த ஊடலுக்கு இடம் இல்லை. காரணம் என்ன? ஒன்று,
மனைவி