| காலத்தின் பெரும்பகுதியில் விளங்கிய வாணவரசன் "ஏகவாசகன் குலோத்துங்கசோழ வாணகோவரசன்' என்பவன். இவன் சாசனங்கள் சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சை ஜில்லாக்களில் அமைந்துள்ளன. இவனன்றி இக்காலத்தில் மிகவும் பிரபலனாக விளங்கியவன். |
| | "ஆறகளூருடைய மகதேசன் ராஜ ராஜ தேவன். பொன் பரப்பினான் வாணகோவரையன்" |
| எனப்பட்டவன். திருவண்ணாமலைக் கோயிலிலும் பிறவிடங்களிலும் வரைந்துள்ள கல்வெட்டுகளில் இவ் வாணனைப் பற்றிய பாடல்கள் பல உள்ளன. அவையாவும் சொற்சொரிவும் பொருட் பொலிவும் பெற்று விளங்கும். அவற்றிலிருந்து பெருந்தமிழ்ப் புலவர்களின் புகழ்மாலை சூடியவன் இவன் என்பது தெரியலாம். இவனது வீரச்சிறப்பும் வெற்றிகளும் அறச்செயல்களும் அப்பாடல்களில் மிக அழகாகச் சிறப்பிக்கப்படுகின்றன. இவன் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலைப் பொன் வேய்ந்தவனாதலால் "பொன் பரப்பினான்" என்ற பெயர் இவனுக்கு வழங்கியது. |
| (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் பக். 65, 66) மாவலி வழியினரைப் பற்றி வி. வெங்கையர் வரைவது. |
| பாண வம்சத்து அரசர்கள் மகாபலியின் பரம்பரையைச் சேர்ந்த வர்கள், அவர்களின் கல்வெட்டுகள் வடஆர்க்காடு ஜில்லா வேலூருக்கடுத்த திருவல்ல மென்கிற கிராமத்திலும், மைசூர் சமஸ்தானத்தில் குல்கான்பொடே என்கிற ஊரிலும் கிடைத்திருக்கின்றன. |
| மூவுலகிலும் தொழப்பட்டவனாயும் தேவர்களுக்கும் அசுரர் களுக்கும் தலைவனாயுமிருக்கின்ற பரமேசுவரனுக்கு வாயில் காக்கும் படியாக நியமிக்கப்பட்ட மகாபலிபுரத்தைச் சேர்ந்தவன், என்று சில பாண வரசர்கள் தங்களுக்குரிய கல்வெட்டுகளிற் சிறப்பிக்கப்பட் டிருக்கிறார்கள். பாண குலத்தைச் சேர்ந்த செப்புப் பட்டயங்கள் இரண்டுண்டு, அவற்றில் ஒன்று சிதம்பரம் கனகசபையின் முகட்டைப் பொன்வேய்ந்த பராந்தகன் என்று சொல்லப்பட்ட வீரநாராயணச் சோழன், பாண வம்சத்தை நின்மூலம் பெய்து அவர் நாட்டைக் கங்க வம்சத்தைச் சேர்ந்த அத்திமல்ல னென்ற அரசனுக்குக் கொடுத்ததாகச் சொல்லுகின்றது. இந்த வீரநாராயணன் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீவித்திருந்தான். மற்றொரு செப்புப் பட்டயத்தில் கீழே எழுதப்பட்டிருக்கும் வம்சாவளி கிடைத்தது. பலி; அவன் மகன் பாணன்; அவன் குலத்திற் பிறந்தவன் பாணாதிராசன். இவ் வம்சத்தைச் சேர்ந்த அநேக அரசர்கள் மரித்தபிறகு இருந்தோன் ஜயந்திவர்மன் (இவன் ஆந்திர தேசத்திற்கு மேற்கிலிருந்த நாட்டை ஆண்டவன்) அவன் |