பக்கம் எண் :

அரசுர் யார்?101

மகன் முதலாம் விக்ரமாதித்தன். அவன் மகன் புகழ்விப்பவர் கண்டன் என்கிற இரண்டாம் விசயாதித்தன். அவன் மகன் விசயபாகு என்று கூறப்பட்ட இரண்டாம் விக்ரமாதித்தன், (மணிமேகலை 19.54 உ.வே.சா. அடிக்குறிப்பு) கீழ்வரும் பாடல்கள் 12ஆம் நூற்றாண்டிலிருந்த ஏகம்ப வாணன் புகழ்பற்றியன.

  "பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம்
மார்பகலக் கண்டு மகிழ்வோரே - போர்புரிய
வல்லான் அகலங்க வாணன் திருநாடே
எல்லாம் எழுதலாம் என்று"
  வாணன் பெயரெழுதா மார்புண்டோ மாகதர் கோன்
வானின் புகழுரையார் வாயுண்டோ வாணன்
கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ வுண்டோ
அடிதாங்கி நில்லா அரசு.
  பாண்டியனைப் பேர்மாற்றிப் பாணர்க்க சரசளித்த
ஆண்டகையென் றுன்னை யறியேனோ மூண்டெழுந்த
கார்முற்றுஞ் செங்கைக் கடகரிவானவுனது
பேர்மாற்றுவதரிதோ பேசு."
  என்கவிகை யென்சிவிகை யென் கவசம் என்துவசம்
என்கரியீ தென்பரிபக தென்பவரே மன்கவன
மாவேந்தன் வாணன் வரிசை பரிசு பெற்ற
பாவேந்தரை வேந்தர் பார்த்து,"
  தேருளைப் புரவி வாரணத் தொகுதி
திறைகொணர்ந்து வரும் மன்னநின்
தேசமேதுனது நாமமேது புகல்
செங்கையாழ் கடவு பாணகேள்
  வாரும் ஒத்தகுடி நீரும் நாமுமக
தேவன் ஆறைநகர் காவலன்
வாணபூபதி மகிழ்ந்தளிக்க வெகு
நீரிசை பெற்றுலகு புலவன் யாக
வருடம் இப்பரிசு பெற்று மீள்வர
லாகும் ஓடும் அவன் முன்றில்வாய்
நித்திலச் சிவிகை மாட மாளிகை
நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆரும் நிற்கும் உயர் வேம்பும் நிற்கும் வளர்
பனையும் நிற்கும் அதன் அருகிலே
அரசும் நிற்கும் அரசைச் சுமந்த சில
அத்தி நிற்கும் அடையாளமே."