| | குழியம் = 1. வளைதடி. (W.). 2. நறுமண வுண்டை. (சிலப். 14:171, அரும்.). 3. உருட்சி. (திவா). |
| | குள் - குண்டு = 1. உருண்டிருப்பது அல்லது உருண்டு கனத் திருப்பது. 2. உருண்டையான நிறைகல். 3. உருண்டையான பொன்மணி. "பொன்னின் பட்டைமேற் குண்டு வைத்து" (S.I.I. ii. 182). 4. விலங்கின் விதை. 5. வெடிகுண்டு. 6. உருண்ட மாம்பழ வகை. 7. உருண்ட கல வகை. 8. உருண்டு திரண்ட ஆண் குதிரை அல்லது ஆண் கழுதை. தெ. குண்ட, மரா. குண்ட (g). |
| | குண்டன் = தடித்த குள்ளன். |
| | குண்டான் - உருண்ட சட்டி வகை. |
| | குண்டான் - குண்டா. மரா. குண்டா (g). |
| | குண்டி = உருண்டு திரண்ட புட்டம். |
| | குண்டை = உருண்டு திரண்ட காளை. |
| | குண்டு - குண்டலம் = 1. வட்டம் 2. சுன்னம், 3. வானம். (பிங்.) 4. ஆடவர் காதணி வளையம். |
| | குண்டலம் - வ. குண்டல. |
| | குள் - குண் - குண - குணகு. குணகுதல் = வளைதல். |
| | குணகு - குணங்கு. குணங்குதல் = வளைதல். |
| | குணகு - குணக்கு = வளைவு. "நாய் வாலைக் குணக் கெடுக்கலாமா?" (பழ.). |
| | குணக்குதல் = வளைத்தல். |
| | குணகு - குணுகு - குணுக்கு = 1. சிறுமியர் காது வளையம். 2. மீன்வலை ஈயகுண்டு. |
| | குணுக்குதல் = வளைத்தல். |
| | குணலை = நாணத்தால் உடல் வளைகை "கூச்சமுமாய்ச் சற்றே குணலையுமாய்" (பணவிடு. 310). |
| | குண - குணம் - குடம் = 1. உருண்ட திரட்சி. (w.). 2. வண்டிக் குடம். 3. நீர்க்குடம். 4. கும்ப ஓரை. (பன்னிருபா. 163). 5. குடதாடி 6. குடக்கூத்து. "நீணில மளந்தோ னாடிய குடமும்" (சிலப். 6:55). |
| | குடம் - வ. கடம் (ghata). |
| | குடக்கம் = வளைவு. குடக்கி = வளைவானது. |
| | குட = வளைந்த (திருமுரு. 229, உரை). |
| | குடம் - குடங்கு. குடங்குதல் = வளைதல். |