பக்கம் எண் :

160தமிழியற் கட்டுரைகள்

  குடங்கு-குடங்கர் = 1. குடம். "குணங்கர் கொணர்ந்திடா......நொண்டு கொண்டனர்" (கந்தபு. தேவகிரி. 24). 2. கும்பவோரை (சூடா).
  குடம் - குடந்தம் = 1. மெய் வளைத்துச் செய்யும் வழிபாடு. "குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி" (திருமுரு. 229). 2. நால்விரல் முடக்கிப் பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடை வைக்கை. (திருமுரு. பக். 47, அடிக்குறிப்பு.) 3. குடம். (பிங்.).
  குடம்-குடா = 1. வளைவு; "குடாவடி யுளியமும்" (சிலப். 25:50), 2. குடாக்கடல். வளைகுடா, எ-டு: மன்னார்குடா, விரிகுடா, எ-டு; வங்காளக்குடா, 3. மூலை (W.).
  குள் - கூள் - கூளி = வளைந்த பச்சை வாழைப்பழம்.
  குள் - கொள் = வளைந்த பயற்றங்காய். அதிலுள்ள பயறு.
  கொள் - கொண்பு - கொம்பு = விலங்கின் தலைமேலுள்ள வளைந்த வுறுப்பு, மரக்கிளை, கோல், பிள்ளை, பெண்பிள்ளை, வளைந்த எழுத்து வரி.
  கொம்பு - கொப்பு = கொம்பு போன்ற மரக்கிளை, ஒரு காதணி.
  கொம்பு - கம்பு = கோல், தடி (பாண்டி நாட்டு வழக்கு).
  கம்பு - கம்பம் = தூணாக நாட்டும் பெருமரத் தடி.
  கொம்பு - கொம்பன் = ஆண்பிள்ளை, சமர்த்தன்.
  கொள் - கொடு - கொடுமை = வளைவு, நெறிதிறம்பல், அட்டூழியம்.
  கொடுவாள், கொடுக்காய்ப்புளி முதலியவற்றிற் பருப்பொருட் கோணலையும்; கொடுங்கோல், கொடும்பாடு முதலியவற்றில் நுண் பொருட் கோணலையும்; கொடுமைச் சொல் குறித்தல் காண்க.
  கொடு - கொடுக்கு = 1. வளைந்த கொட்டும் உறுப்பு; 2. அழகிய ஆடைத்தொங்கல். "கச்சை புனைந்ததிலே விட்டான் பெருங் கொடுக்கு" (திருவாலவா. 30:9). 3. தொங்கும் கிழிசல்.
கொடுக்கன் = தேள். கொடுக்கி = தேட்கொடுக்கி என்னும் செடி. கொடுக்கு - ஒ. நோ: E. crook, ME, croc, ON. krokr, hook.
  கொடு - கொடுகு. கொடுகுதல் = கொடுமையாதல். "கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்." (தேவா. 918:1).
  கொடு - கொடும்பு = கொடுமை
  கொடு - கொடி = வளைந்து நீண்டு வளரும் தண்டு.
  கொடு - கொடிறு = வளைந்த பற்றுக் குறடு, பற்றுக் குறடு போன்ற வாயலகு (கதுப்பு).