| 4. சமற்கிருத வரலாற்றுச் சுருக்கம் | | ஓரிலக்கம் ஆண்டுகட்குமுன் மாந்தன் தோன்றியதும், ஐம்பதி னாயிரம் ஆண்டுகட்குமுன் தமிழன் தோன்றியதும், ஒரு காலத்தில் இந்தியாவை ஆத்திரேலியாவோடும் தென்னாப்பிரிக்காவோடும் இணைத்துக் கொண்டிருந்ததும், இந்து மாவாரியிலும் அமைதி மாவாரி யிலும் மூழ்கிப்போன (மேலையர் 'இலெமுரியா' (Lemuria) என்னும்) குமரிக் கண்டமே. | | குமரிக்கண்ட அநாகரிக மாந்தர் முன்பும், பண்பட்ட தமிழ் மக்கள் பின்பும், பல்வேறு நிலையில் பல்வேறு காலத்தில் பல்வேறு திசையாகச் சென்று பார்முழுவதும் பரவிப்போயினர். | | பனிமலைப் பக்கமாக வடதிசை நோக்கிச் சென்ற தமிழர், நாளடைவில் திரவிடராகத் திரிந்தனர். அவருள் ஒரு சாரார் வடமேற்காக ஐரோப்பா நோக்கிச் சென்று ஆரியராக மாறினர். அவருள் ஒரு வகுப்பார் கிரேக்கத்திற்கு மிக நெருங்கிய ஒரு மொழியைப் பேசிக் கொண்டு, கி.மு. 1500 போல் இந்தியாவிற்குட் புகுந்தனர். | | அவர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நிலையில் எழுத்தின்றியும் சிறு தெய்வங்களை வணங்கிக்கொண்டும் அரை நாகரிகராகவே இருந்தனர். அவர் சிறு கூட்டத்தாராயிருந்ததனால், பேரினத்தாராகிய வடநாட்டுப் பழங்குடி மக்களொடு கலந்தபின் தம் தாய்மொழியை மறந்துவிட்டு, பிராகிருதம் என்னும் முந்து திரவிட மொழியையே பேசினர். ஆயின், அவருட் பூசகர் மட்டும், பழங்குடி மக்களின் பேதைமை, மதப்பித்தம், கொடைமடம் ஆகிய குணங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தம்மை நிலத் தேவரென்றும் தம் முன்னோர் மொழியைத் தேவமொழியென்றும் கூறி ஏமாற்றி, தம்மை அளவிறந்து உயர்த்தி, அப் பழங்குடி மக்களை அடிமை யராகத் தாழ்த்திவிட்டனர். இங்ஙனம் செய்தற்கு, அவர் வெண்ணிறமும் அவர் முன்னோர் மொழியின் எடுப்பொலியும் துணை நின்றன. | | பழங்குடி மக்களுள் தம் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவரை, ஏற்றுக்கொண்டவரைக் கொண்டே போரிட்டு அடக்கியும் விட்டனர். தமிழ நாகரிகம், தலைசிறந்துள்ள தென்னாட்டிலும், ஆங்கிலராட்சியால் அறிவியற் கல்வி பெற்று ஆராய்ச்சி செய்யும் இன்றும், ஆரியச் சார்பான தமிழரும் திரவிடரும் அச் சார்பில்லாத் தம் இனத்தாரையே வன்மையாக எதிர்த்து நிற்றலை நோக்கிக் தெளிக. | | இந்திய ஆரியர், முதற்கண் அக்கினி, வருணன், மித்திரன், உருத்திரன், இந்திரன் முதலிய சிறுதெய்வங்கட்கு விலங்குகளை வேள்வியிற் படைப்பதையே மதமாகக் கொண்டிருந்தனர். அவ் வேள்விகளில் அவர் பாடிய சிறு தெய்வ வழுத்துத் தொகுப்பே பிற்காலத்தில் 'வேதம்' எனப்பட்டது. வேதக் காலத்திலேயே ஆரியப் பூசகருள் ஒரு சிலர் தென்னாடு | | |
|
|