பக்கம் எண் :

163ஆய்வு

செய்யுள் நடை

    எதுகை மோனைகள் அமைந்து, இனிய ஓசையுடைய செஞ் சொற்களால்
ஆன செய்யுள் நடை பல இடங்களில் உள்ளன.

          கூழைப் பருவத்து மாழை கலந்த ஏழ்மை நீர்மை

என்றும்,

          அந்தி வானகட்டுச் செங்கோட்டு
         மதர்வைக் குழவித் திங்களைக் கண்டு

என்றும் வருகின்ற இடங்களை உள்ளத்தைக் கவர்கின்றன.

     வஞ்சிப்பாவும் அகவற்பாவும் பல அடிகளாகத் தொடர்ந்து வருகின்றன:

          கருவமைந்த மாநகரிற்கு
         உருவமைந்த வாயில்மாடம் போலவும்,
         அளப்பரிய ஆகாயத்திற்கு
         விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும்
         வகைமாண்ட நெடுஞ்சுவர்க்குத்
         தகைமாண்ட பாவை போலவும்

என்றும்,

          புதையிருள் இரியல் போக,
         பொன்தாழ் அருவி மணிநெடுங்கோட்டு
         உதயம் என்னும் மணிவரை யுச்சி
         உலகு துயில் பெயர்த்துத் தோன்றிய
         வளர்ஒளி இள ஞாயிற்றின்
         வனப்பொழித்த திருவொளி மழுங்கியது

என்றும்,

          பொரிப்புன்கும் புன்னாகமும்
         முருக்கொடு முகைசிறந்து
         வண்டறைந்து தேனார்ந்து
         வரிக்குயில்கள் இசைபாட,
         தண்தென்றல் இடைவிராய்த்
         தனியவரை முனிவுசெய்யும்
         பொழிலது நடுவண்

என்றும் வருகின்ற இடங்களில் வஞ்சிப்பா நடை உள்ளது.

     அகவற்பா நடை காணப்படும் இடங்கள் உள்ளன. அவற்றுள் சில:

          கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து
         நாகமும் திலகமும் நறவும் நந்தியும்

என்றும்,