பக்கம் எண் :

57பாயிரம்

இருந்து, அச்சு வடிவம் பெற்ற நூல்கள், மூலம் உரை பதி்ப்பு ஆய்வு ஆகிய
நான்கு
கூறுகளிலும் சிறந்து விளங்குகின்றன.

     பழைய உரைகள் அச்சுவடிவம் பெற்று வெளிவந்த பின்னரே,
அவற்றின் தேவையும் முதன்மையும் சிறப்பும் தமிழுலகிற்குத் தெரிந்தன.
அதன் பின்னரே உரை ஆய்வுகள் பல வகையாய்த் தோன்றின.
உரையாசிரியர்களின் வரலாறு அறிதல், உரைகளில் உள்ள பாட வேறுபாடு,
பிழை ஆகியவற்றை அடையாளம் காட்டுதல், தவறான உரைகளை மறுத்தல்,
மறுப்புக்கு மறுப்பு உரைத்தல், உரைகளுக்குச் சரியான பொருளும் விளக்கமும்
கூறுதல் முதலிய பல வடிவங்களில் - முற்கால இதழ்களில் உரை ஆய்வுகள்
வெளிப்பட்டன.

விடிவெள்ளி

    இந்த நிலை இருபதாம் நூற்றாண்டின் நடுவில் மாறியது. ஒரு நூலுக்குத்
தோன்றியுள்ள பல உரைகளைத் தொகுத்து ‘உரைவளம்’ கண்டு, உரை
வேற்றுமைகளை அறிந்து உண்மை காணும் முறையான ஆய்வு தோன்றியது.
இத்தகைய நல்ல சூழ்நிலையில் உரைகளின் மாண்பைத் தமிழ் கூறும்
நல்லுலகம் அறிந்து கொண்டது.

உரைகளின் மாண்பு

    உலக மொழிகளில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்குப் பல
வகையான சிறந்த உரைகள் காலந்தோறும் தொடர்ச்சியாக - படிப்படியாக
மெதுவாகப் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தமிழில் தோன்றிக்
கொண்டே இருக்கின்றன. அவையாவும் கவர்ச்சி மிகுந்த தொடர் கதைகளின்
சிறப்பியல்புகளைப் பெற்றுள்ளன.

     உரைகள், தமிழ் மக்களின் சிந்தனையில் வேரூன்றிப் பண்பாட்டில்
தழைத்து வளர்ந்து செயல்களில் சிறந்து விளங்குகின்றன. அவர்களின்
சிந்தனையை ஒருமுகப்படுத்தி, செயல் களைச்சீர் செய்து, வாழ்க்கையை
நெறிப்படுத்தி வருகின்றன.

     அவ்வுரைகள் தாம் தோன்றிய காலம் முதல் இன்று வரை, காலப்
பாதையில் நெடுக ஒளி வீசி வழி காட்டி வருகின்றன; காலந்தோறும் தம்
செல்வாக்கை நிலைநாட்டி வருகின்றன.

     மூல நூல்கள் தங்கச் சுரங்கம் என்றால், அவற்றின் உரைகள் தங்கச்
சுரங்கத்திற்குள் அமைந்துள்ள மற்றொரு வைரச் சுரங்கமாகும். உரைகள்
யாவும் அள்ளக் குறையாத அமுத சுரபிகள்; எப்போதும் வற்றாத ஆறுகள்;
கால மாற்றத்தால் நிலை குலையாத