பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 131

மாகவே  எழுதுகிறார்கள்"   என்று ராஜாஜி  வேதனையுடன்   குறிப்பிட்டது நியாயந்தானே!

     இன்றுங்கூட, ஆங்கிலமொழி  பயிலாதவர்கள் - தமிழில் எவ்வளவுதான்
புலமை  பெற்றிருந்தாலும் - கல்வியில் " ஸி "  நிலையினராகத்தானே  கருதப்
படுகின்றார்கள்? அன்று ஆங்கிலேயர் ஆட்சியிலே  தேசப் பற்றுடையவர்கள்
அலட்சியப்    படுத்தப்பட்டார்களென்றால்,    இன்று   தாய்மொழியின்பால்
பற்றுடையவர்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள்.

     வ.உ. சிதம்பரனார்,   வ.வே.சு. ஐயர்,  சுப்பிரமணிய   சிவா  போன்று
ராஜாஜியும்சிறைவாச காலத்திலேதான் தமிழ்த் தொண்டினைத் தொடங்கினார்.
சிறைபுகுந்த தேசபக்தர்கள் எல்லோரும் தங்கள் சிறைவாச காலத்தைத் தமிழ்ப்
பணிக்குப்   பயன்படுத்தினார்களில்லை.   அவர்களிலே   சிறைச்சாலையைத்
தவச்சாலையாக  மாற்றிக்  கொள்ளும்  ஆன்ம  பலமுடையவர்களே தமிழ்ப்
பணியில்  ஈடுபட்டார்கள்.  ராஜாஜி  அவர்களுக்கு அந்த ஆன்ம பலமுண்டு.

     மூன்று மாதச் சிறைவாச காலத்தில் தினந்தோறும் 'நாட்குறிப்பு' ( டைரி )
எழுதி  வந்தார்.  அது, "சிறையில் தவம்" என்ற பெயரில் நூலாக வெளியிடப்
பட்டுள்ளது. அதிலே, 24-12-21 அன்று கீழ்வருமாறு எழுதியுள்ளார்.

     "ஆரம்பத்தில்      மனத்தை     ஒரு    நிலையில்      நிறுத்துவது
கஷ்டமாகவே     இருந்தது.    ஆனால்    இப்பொழுது      எளிதாகவே
இருக்கிறது.    ஆண்டவனுடன்     ஐக்கியமாகி     இந்தச்      சிறையின்
கம்பிகளை    முறித்துவிடக்     கூடிய      சக்தியைப்         பெற்றுவிட
முடியும்      என்று    எண்ணுகிறேன்.     என்னுடைய     மனத்திலுள்ள
மாசுகளை    நீக்கி      என்னை        ஆற்றலுடையவனாக     ஆக்கிக்
கொள்வதற்கான       இந்தப்    பெரிய      சந்தர்ப்பத்தை     இறைவன்
எனக்கு     அருளியிருக்கிறான்.   உலகத்தில்   நல்ல      காரியத்திற்காகச்
சிறைவாசம்     அனுபவித்தவர்கள்  வெகு     சிலரே.  அந்த   வீரர்களில்
எத்தனை்    பேரை    நம்முடைய   தாய்நாட்டில்        காணமுடியும் ?
அந்தச்   சிலரில்       நானும்      ஒருவனாகிவிட்டேன்.      அத்தகைய
அதிர்ஷ்டத்தை      அடைந்துவிட்டதாகவே       எண்ணுகிறேன்.     இது
கர்வம்தான்.     ஆனால்,     கடவுளை     நம்பி  ஆற்றல்  பெற இதுவும்