கொண்டுவந்த பெருமைக்குரிய பெருந்தலைவர்களிலே ராஜாஜி
முதன்மையானவராவார். இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்தவேண்டும். விடுதலைப்
போரிலே, திலகர் கடைப்பிடித்த நடைமுறைக்கும் காந்தியடிகள் கடைப்பிடித்த
நடைமுறைக்கும் மிகுந்த வேறுபாடுண்டு. ஆயினும், ' பூரண விடுதலை ' என்ற
தத்துவத்திலே இவர்களிடையே வேற்றுமையில்லை. அந்த வகையில் திலகரின்
வாரிசாகவே வாழ்ந்தார் காந்தியடிகள். தலைவர் ராஜாஜி, தமது சிறைவாசத்தையும் தமிழ் வளர்ச்சிக்காகப்
பயன்படுத்தியவராவார். 1921 டிசம்பரில் இவர் முதன்முதலாக வேலூர்
மாஜிஸ்திரேட்கோர்ட்டில் மூன்று மாதச் சிறைத்தண்டனை பெற்றார். அன்றே
வேலூர் மத்திய சிறைக்குள் தள்ளப்பட்டு, அங்கேயே தமது தண்டனைக்
காலம் முழுவதையும் கழித்தார். பிற்காலத்தில் சுதந்திர இந்தியாவின் முதல்
கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற இவரை எழுதப் படிக்கத் தெரியாத
பாமரராக்கியது சிறைச்சாலை அதிகாரவர்க்கம். அந்தச் சுவையான செய்தியை
ராஜாஜியே கூறக் கேட்போம்:
" இன்று டிசம்பர் மாதம் 2ம் தேதி. என்னுடைய கழுத்தில் மாட்டிக்
கொள்வதற்காக என்னுடைய பதக்கத்தை ஒரு கயிற்றில் கட்டிக் கொண்டு
வந்தார்கள். அந்தப் பலகைத ் துண்டில், " 8393. 21-12-21- 20.3.22 " என்று
எழுதியிருந்தது. முதலில் உள்ளது நான் சிறைக்கு வந்த தேதி. அடுத்தது நான்
விடுதலை பெறும் தேதி.
" என்னுடைய " சரித்திர அட்டை "யில் கீழ்க்கண்ட விவரங்களும்
காணப்பட்டன.
"அரசியல் கைதி. வந்த தேதி 21.12.21. அப்பீல் செய்ய மறுத்துவிட்ட
தேதி 24.12.21. பெயர் ஸி.ராஜபோபாலாச்சாரியார். பிராம்மணர்.இந்திய தேசியக்
காங்கிரசின் பொதுக் காரியதரிசி. கல்விநிலை: ஸி."
"ஸி" என்பதன் பொருள் எழுத்து வாசனையில்லை என்பதாகும்.
இவ்வளவு அலட்சியமாகவே எழுதுகின்றார்கள்."1
வழக்கறிஞராக விளங்கிய தம்மை எழுத்து வாசனையில்லாத
வராகச் சிறை அதிகாரிகள் எழுதியதனை, "இவ்வளவு அலட்சிய
1. "சிறையில் தவம்", பக், 14-15