" கண்ணன் பாட்டு " என்ற பக்திச்சுவை ததும்பும் தமிழ் மணங்கமழும்
இலக்கியத்தினை வெளியிட்டார். பாரதியார் கவிதைகளைப் பரப்ப இவர்
ஆற்றியுள்ள அருந்தொண்டு போற்றற்குரியதாகும். பரலி சு. நெல்லையப்பர்,
பாரதியார் - வள்ளுவர், இளங்கோ, கம்பர் ஆகிய மகாகவிகளின் வரிசையில்
வைத்தெண்ணத் தக்க மகாகவி என்பதனை முதன் முதலாக மக்களுக்கு
எடுத்துரைத்த பெருமைக்குரியவர். பாரதியாரின் " கண்ணன் பாட்டு" என்னும் நூலுக்கு 1917ல் எழுதியுள்ள
குறிப்புரையில் நெல்லையப்பர் மிகுந்த தீர்க்கதரிசனத்துடன் பின்வருமாறு
கூறியுள்ளார்.
"இதன் ஆசிரியர் ஸ்ரீ.சுப்பிரமணிய பாரதியாரைத் தமிழ் நாட்டார்
அறிவார்கள். ஆனால் அவர் பெருமையை உள்ளபடி அறிந்தவர்கள் மிகமிகச்
சிலரேயாவர். ஸ்ரீமான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி ; மகா பண்டிதர்;
தெய்வீகப் புலவர்; ஜீவன் முக்தர் ; இவர் 'தமிழ்நாட்டு' ரவீந்திரநாதர்! எனது
தமிழ் நாட்டின் தவப் பயன்.
"இவ்வாறு கூறுவதால் எனது நண்பரை மிகுந்த உச்சஸ்தானத்தில் ஏற்றி
வைப்பதாக எவரும் கருதவேண்டாம். அவருக்கு யான் கொடுக்கும்
உச்சஸ்தானம் நிச்சயமானது. இதனைத் தற்காலத்தில் அறியாதவர்கள்
பிற்காலத்தில் அறிவார்கள்."
திருநெல்வேலியில் 1908ல் " சுயராஜ்ய தினம்" கொண்டாடப்பட்டபோது
அதனை ஒரு கலவரம் என்று வருணித்து, பரலி. சு.நெல்லையப்பர் உள்படப்
பலர்மீது அரசாங்கம் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கிலே நெல்லையப்பர்
சிறைத் தண்டனை பெற்றார். 1941ல் சென்னை நகரிலே தனிநபர் சத்தியாக்
கிரகத்தில் ஈடுபட்டு இரண்டாவது முறையாகவும் சிறைவாசமேற்றார்
அடக்கத்தையும் பண்பையும் அணிகலன்களாகக் கொண்ட நெல்லையப்பர்,
சரித்திர நாயகர்களில் ஒருவராவார்.
ராஜாஜி
தலைவர் ராஜாஜி, திலகர் சகாப்தத்திலிருந்து காந்தி
சகாப்தத்துக்கு நாடு மாறிக்கொண்டிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
கட்டத்திலே அரசியல் வானில் தோன்றினார். தத்துவ ரீதியில்
சொல்வதனால், திலகரிஸத்திலிருந்து காந்திஸத்திற்கு நாட்டைக்