முண்டாகிறது. தமிழைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும்,
வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லை. தமிழச்சியைக்
காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம்
புண்படுகிறது. "தம்பி-உள்ளமே உலகம்.
"ஏறு! ஏறு! ஏறு! மேலே, மேலே, மேலே! நிற்கும் நிலையிருந்து கீழே
விழாதபடி கயிறுகள் கட்டிவைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும்
பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல்குலுங்கச் சிரி.
"உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்துபோ! பற! பற! மேலே, மேலே,
மேலே.!"
பரலி நெல்லையப்பர், தமிழிலே பெரும்புலமையுடையவர்; சிறந்த
கவிஞர்; பாரதியார் நடத்திய வார இதழான "இந்தியா"விலும், சிவா நடத்திய
மாத ஏடான "ஞான பாநு"விலும், வ.வே.சு.ஐயர் நடத்திய " பால பாரதி" யிலும்,
திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த " தேசபக்தன் ", "நவசக்தி"
ஆகிய நாளேடுகளிலும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதித் தமிழ் வளர்க்கும்
பணியிலே பங்கு பெற்றுள்ளார். சொந்தத்தில் " லோகோபகாரி " என்ற வார
இதழை நடத்தி, பத்திரிகைத் துறையிலே தமிழ்மொழி வளம் பெறவும் வாழ்வு
பெறவும் நேரடியாகத் தொண்டாற்றியுள்ளார். பாரதியாரின் " இந்தியா "வில்
துணையாசிரியராக இருந்தும் தொண்டாற்றியுள்ளார். ' தேசபக்தன் ' ஆசிரியர்
வ.வே.சு.ஐயர் சிறைபட்ட பின்னர், அவருக்குப் பதில் ஆசிரியர் பீடத்தில்
அமர்ந்து நாட்டில் தேசபக்தியைப் பரப்பப் பாடுபட்டுள்ளார்.
பாரதியின் புகழ் பரவ...
பாரதியின் கவிதைகளைத் தொகுத்து "நாட்டுப் பாடல்கள் "
என்னுந் தலைப்புத் தந்து வெளியிட்டார். ஆம்; "தேசியப்
பாடல்கள் " என்று பெயர் தந்தால் அந்த நூலை அரசு பறிமுதல்
செய்யுமோ, அதனால் தமிழைக் கொண்டு தேசியத்தை வளர்க்கவும்,
தேசியத்தைக் கொண்டு தமிழை வளர்க்கவும் பாரதியார்
மேற்கொண்ட முயற்சி பயனற்றுப் போகுமோ என்று அஞ்சித்தான்"
நாட்டுப்பாடல்கள் " என்று பெயர் தந்தாராம். 1918ல் பாரதியாரின்