பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 133

ஆபாசமாக  மொழி  பெயர்த்திருக்கிறார்களே,  அது  இருக்காது உங்களிடம்.
கம்பராமாயணம்தான் வைத்திருப்பீர்கள். அதில் சில பாகங்களை நான் போப்
தயாரித்துள்ள தமிழ் வாசக நூலில் படித்திருக்கிறேன்."1

     ராஜாஜி,  விடுதலைப்  போராட்ட காலத்தில் பலமுறை சிறை புகுந்தவர்.
தாம்  சிறைபுகுந்த  ஒவ்வொரு  நேரத்திலும் தம்முடைய இலக்கிய ஞானத்தை
வளர்த்துக்  கொள்ளவும்  தமிழ்  நூல்கள்   எழுதவும்  தமக்குக்   கிடைத்த
ஓய்வைப் பயன்படுத்தினார்.

     தமிழ்  மொழி  வளர்ச்சிக்கு  ராஜாஜி  ஆற்றியுள்ள  பணிகள் இன்னும்
பலவுண்டு.  அவற்றை காந்தி சகாப்தத்தில விரிவாகக் காண்போம்.


1. 'சிறையில் தவம்'பக்.125