பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 17

     குளிக்க மஞ்சள் அரைக்கையிலே
          கம்புக்கரி போல் போகக் கண்டேன்
     கறிக்கு அரைக்கும் மஞ்சளை நான்
          கட்டைக் கரிபோல் போகக் கண்டேன்
     திருக்கழுத்திலே மாங்கலியம்
          சீக்கிரம் மெல்லக் கழற்றக்கண்டேன்
     வெள்ளை சீலை முக்காடு போட்டு
          வெளியிலே நான் போகக்கண்டேன்
     கயத்தாத்திலே கட்டப்புளியிலே
          கட்டபொம்மு தலை தூங்கக் கண்டேன்
     வடக்குக் கோட்டை வாசலிலே
          மன்னன் ஊமையைத் தூக்கக் கண்டேன்
     இத்தனை சொப்பனம் கண்டேனையா,
        இன்றைக்கு உம்மை மறந்தேனையா

கட்டபொம்மன் கும்மி

   மங்கை வாழ்கவி என்பார் பாடியுள்ள "கட்டபொம்மன் கும்மி" மிகச்சிறந்த
இலக்கியமாகும்.   இந்த   இலக்கியத்தைப்  படைத்த   கவிஞர்  பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தின்  அடக்கு  முறைக்கு  ஆளானவர்  என்று  அறிகி்றோம்.

       பாடி வைத்தாரங்கே கும்பினியார் - நல்ல
           பாங்குடன் விலங்கு போட்டதுவும்
       மூன்று மாசம் விலங்குடன் இருந்து
           முடித்து வைத்தேனிப் பாரதத்தை!

     என்று அவரே பாடியுள்ளார். கைவிலங்குடன் இருட் சிறையில்  அடைப்
பட்ட நேரத்தில் கவிதை வடிவில் இந்த இலக்கியத்தை உருவாக்கினாரென்றால்,
அவருடைய உள்ளத்தில் உருவாகியிருந்த தேசபக்தியை என்சொலிப் புகழ்வது!

    வீரபாண்டியக் கட்டபொம்மனைப் பற்றிய கவிதை இலக்கியங்கள் தேசபக்த
மாவீரர்களின்   செந்நீராலும்  -  அவர்களுடய   பிரிவால்  விம்மியழுத வீர
மங்கையரின் கண்ணீராலும் எழுதப்பட்டவை. இதற்கு , "கட்டபொம்மன் கும்மி"
தோன்றிய வரலாறே சான்றாகும்.

     "பாஞ்சைக்  "கோவை"  என்னும் கவிதை  இலக்கியத்திலே  பாஞ்சைப்
பதியாண்ட  வீரபாண்டியனின்  ஆட்சியை  வருணிக்கும்  கவிதை வருமாறு: