பக்கம் எண் :

18விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

       வடக்கும் கிழக்கும் தென்மேற்கும்
            திகாந்தமும் மன்னர்குறும்
       படக்கும் தென்பாஞ்சைச் செகவீர
            பாண்டியன் ஆணைஎன்றால்
       கடக்கும் அரிதென்று எறும்பானது
            நின்று கால்பதறிக்
       கிடக்கும் நடக்கும்பின் உத்தர
            வானகிள் ளாக்குகண்டே

இராமநாதபுரம் பேட்டி விருத்தம்

      "இராமநாதபுரம் பேட்டி விருத்தம்" என்னும் கவிதை இலக்கியத்தின்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

     கட்டபொம்மன் வீர வரலாற்றிலே, இராமநாதபுரம் "இராமலிங்க விலாச"
மாளிகையிலே, கலெக்டர் ஜாக்சன் துரையைக்கட்டபொம்மன் பேட்டி கண்ட
நிகழ்ச்சி  சரித்திர  முக்கியத்துவம்  வாய்ந்ததாகும் . இதனை  உணர்த்தவே,
"இராமநாதபுரம் பேட்டி விருத்தம்" என்ற பெயரில் தனி இலக்கியமொன்றைப்
படைத்துள்ளார்  நம்மால்  பெயர்  அறிந்து  கொள்ளமுடியாத   ஆசிரியப்
பெருந்தகையார். ஒரு விருத்தம் வருமாறு:

    பாண்டியன் ரணசூர பாண்டியன் யார்க்குமே
       பாரினில் வணங்கா முடிப்
    பாண்டியன் திசையெட்டும் இசைகட்டி யாண்டவுயர்
       பாண்டியன் யாண்டும் அஞ்சாப்
    பாண்டியன் என்றெங்கும் ஆண்தகைமை பூண்டுதென்
        பாஞ்சையில் அமர்ந்து நீதி
    பரனாகி ஆண்டமரர் பதியாய்  அமர்ந்தரசு
        பாலித்து வந்தன னரோ.

     " இராமநாதபுரம்  பேட்டி  விருத்தம்" ஏழுசீர்களையுடையதாய், பாதம்
ஒன்றுக்கு 32 வீதம் 128 அடிகளில் அமந்திருக்கின்றது. இதனை இயற்றியவர்
பெயர் தெரியவில்லை. கட்டபொம்மனின் ஆதீனப்புலவராக இருக்க வேண்டு
மென்று சிலர்  கருகிதுன்றனர். மதுரை ஜெகவீரபாண்டியனார், தாம்  இயற்றி
அச்சிட்டுள்ள   "பாஞ்சாலங்குறிச்சி  வீர  சரித்திரம்"   என்ற   உரைநடை
நூலினுள், "இராமநாதபுரம் பேட்டி விருத்தம்" முழுவதையும் சேர்த்துள்ளார்.
 

     கலெக்டர் ஜாக்ஸன் துரையின் அழைப்பை ஏற்று, அவனைப் பேட்டி
காண  வீரபாண்டியக்கட்டபொம்மன்  புறப்படும் காட்சி பற்றிய வருணணை
வருமாறு: