பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 19

      தென்னாட்டு வேந்தனே எந்நாட்டி னும்புகழ்
           சேரவுயர் வீர பாண்டியா!
       தெய்வேந்தி ராபராக் கென்றுகட் டியவுரகள்
           திசைதிசை முழங்கி யேறத்
       தித்திமத் தளமுதல தத்திமிதி யென்னவே
           செப்பமுட னொத்தொ லிக்கத்
       தெய்வமறை வேதியர்கள் ஆசிமுறை சொல்லியே
            தேசுவரு கென்று வாழ்த்தச்
       செந்தமிழ்ப் பாவலர்கள் வந்தருகில் நின்றுயர்
            செயமங் களம் படிக்கத்
       தெள்ளிய தொளாயிரத் தெழுபத்து நாலாண்டு
            திகழ்கால சுத்தி வருடம்
       செய்யஆ வணிமாதம் ஒன்பதாந் தெய்தியுயர்
            தெசமிகுரு வாரநாளில்
       திடவிகட குஞ்சரத் திரள்களும் பரிகளும்
            சேனையு மருங்கு சூழக்
       கார்கொண்ட முகிலொலியும் நாணநக ராத்தொனி
            கணகண கணீர் என்னவே
       கனகதண் டிகைமிசை யனைவரும் கைதொழக்
            காமன் எனவே எழுந்தான்!

கட்டபொம்மு சண்டைக்கும்மி

     முடிமன் என்னும் ஊரில் வாழ்ந்த மலையேறு சின்னுநாய்க்கர்  என்பவர்
பாடியுள்ள  "கட்டபொம்மு சண்டைக்கும்மி"  என்னும்  நூல்  பாளையக்காரர்
போர் தந்த மற்றொரு இலக்கியமென்பதனை முன்பே அறிந்தோம். அந்நூலில்,
வெள்ளைத் தளபதிகள் தம்முடைய படைகளைக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சிக்
கோட்டையை முற்றுகையிட்ட நிகழ்ச்சியைக் கூறும் வரிகள் வருமாறு:


    ஆரும் அறியாம லேயிருக்க அத்த
       சாமத்தில் பிற்கட்டு காலன்துரை,
    வீர நகரெனும் பாஞ்சைப் பதிதனை
       வெல்லலாம் என்று விரைந்து தடைந்தார்.
    முளை பிடுங்கி உயிர்குடிப்பான் கட்ட
       பொம்மு முரசம் முழக்கு வித்தான்;
    வேளை விடியட்டும் பீரங்கி குண்டிட்டு
       வேரறுப் போமென்று காலன் எண்ணி,