பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 255

யங்கள் வெளிவந்தன .அயல் நாடுகளில்  -  குறிப்பாக   லண்டன் , பாரிஸ்
ஆகிய    நகரங்களில்    தங்கியிருந்த   புரட்சி    வீரர்களின்  எழுத்துக்

களும்  பிரசுரிக்கப்பட்டன. சான்று வருமாறு:

      'சுதந்திர  இந்தியா  சங்கம்'  என்ற  பெயருள்ள ஒரு ஸ்தாபனத்தை
நாங்கள்  நடத்திவந்தோம்.  இதற்கு  விநாயகஸாவர்க்கரும்  ஐயரும்  உயிர்
நாடிகள்.  பெரும்பாலும்  சீமைக்குப்  படிக்க  வந்த இளைஞர்களே  இதன்
அங்கத்தினர்கள்.

     "தினந்தோறும்  தேசத்திற்காக   ஒரு   தொண்டு  செய்ய வேண்டும்
என்பது ஒவ்வோர் அங்கத்தினருக்கும் நிபந்தனை.”

      "இந்தியா, இங்கிலாந்து இத்தேசங்களில் இருக்கும்  பத்திரிகைகளுக்கு
கடிதங்கள்,  குறிப்புகள்   முதலியன    எழுதுவதும்  ஒரு  சேவை  எனக்
கருதப்பட்டது.    ஐயர்   அக்காலத்தில்  சென்னையிலும்   புதுவையிலும்
நடைபெற்று வந்த  தமிழ் பத்திரிகைகளுக்குத்  தலையங்கங்களும், 'இந்தியா' பத்திரிகைக்குத்   தொடர்கதையாகச்   சுமார்  ஒரு வருஷ காலம்வரையில்
கரிபால்டி  சரித்திரமும் எழுதி வந்தார். என் பங்கிற்கு ராணி லக்ஷ்மிபாயின் சரித்திரத்தை எழுதி வந்தேன்."1

     சுருங்கக் கூறின், தமிழ் உரைநடை  வளர்ச்சிக்கு அந்நாளில் தேசியப்
பத்திரிகைகளின்   ஆசிரியர்கள் மிகவும் பாராட்டத்தக்க   வகையில் பணி
புரிந்துள்ளனர்.   ஆம்;  எல்லையற்ற  இன்னல்களுக்கிடையே!  இன்றைய
பத்திரிகை  உலகம் அவர்களுக்கு நன்றி செலுத்தக்  கடமைப்பட்டிருக்கிறது.
 

     அந்நாளில்,  சிறை செல்லவும் போலீசார் இழைக்கும் கொடுமைகளை
ஏற்கவும்  அஞ்சாத நெஞ்சுரம் பெற்றவர்களே தமிழில் வெளிவந்த தேசியப்
பத்திரிகைகளின்  ஆசிரியர்களாகவும் துணையாசிரியர்களாகவும்  பணிபுரிய
முன்வந்தனர்.  இன்னும் சொன்னால்,  வெளியூர்களில்  பத்திரிகை விற்கும்
ஏஜெண்டுகளுக்கும் இந்தத் துணிவு தேவைப்பட்டது. இதனால்,பெரும்பாலும்
தேசியத்தொண்டர்களே பத்திரிகை ஏஜெண்டுகளாக இருந்து பணிபுரிந்தனர்.

ஆங்கில எதிர்ப்பு

    இப்படி,    சொல்லொணாத்    தொல்லைகளுக்கும்   துயரங்களுக்கு
மிடையேதமிழ்ப்   பத்திரிகைகளை    நடத்தி   வந்த  நிலையிலும் தமிழ்


1. டாக்டர் டி.எஸ்.எஸ்.இராசன் எழுதிய 'வ.வே.ஸு ஐயர்' பக்.37-38