"தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங்கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல. வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றப்படி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீர வேண்டியிருக்கிறது. வெளியூர்களிலுள்ள "ஜனத்தலைவரும்" ஆங்கில பண்டித "சிகாமணிகளும்" தமிழ்ப் பத்திரிகைகளை சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக் காரியங்களையும், அவரவர் மனதில்படும் புது யோசனைகளையும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப்பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம். ஜனத் தலைவர்களால் இக்காரியம் செய்யமுடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்கவேண்டும்.1 வ.உ.சியின் பேராசை! தமிழ் மொழியில் பத்திரிகை நடத்துவதே கஷ்டமாயிருந்த அந்தநாளிலே இந்தியாவிலுள்ள பிரதான மொழிகள் அனைத்திலுமே பத்திரிகை நடத்த வ.உ.சிதம்பரனார் விரும்பினார். இது பற்றி அவரே தரும் தகவல் வருமாறு: "ஒரு நாள் மாலையில் அரவிந்தர் மாளிகையில் உலக முழுவதிலும் நமது சுதந்திரக் கிளர்ச்சியைப் பரப்ப வேண்டுமென்பது குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். இது சம்பந்தமாக அரவிந்தரிடம் நான் இருபத்தேழு பாஷைகளில் பத்திரிகைகள் நடத்தவேண்டும் என்றும் அதற்கான பணத்தைச் சுலபமாகப் பொதுஜனங்களிடமிருந்து பெறலாமென்றும் கூறி ஒரு திட்டமிட்டு அதை அவருக்கு விளக்கிக் கூறிக்கொண்டிருந்தேன். "இந்தச் சமயத்தில் மாமாவும், ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் அங்கு வந்து சேர்ந்தனர். எனது திட்டத்தைக் கேட்டு மாமா 'கலகலவென' நகைத்தார். பிள்ளைவாள், நாங்கள் ஒரு பத்திரிகை நடத்தவே திண்டாடப்படும் போது இருபத்தேழு பாஷைகளில் பத்திரிகை நடத்துவது என்பது சாமான்யமா? அதற்கு எவ்வளவு ஆள்வேண்டும்? இதெல்லாம் நடக்கிற காரியமா, ஓய்? எனக் கேட்டார். 'எனக்கு மாமா மீது கோபம் வந்துவிட்டது. "பாரதி" ஊரைஆள ஒரு பத்திரிகை போதும். உலகத்தை ஆள எவ்வளவு 1.பாரதி-கட்டுரைகள், 'தமிழின் நிலை' என்ற பகுதியில், |