உலகத்தை ஆள எவ்வளவு பத்திரிகைகள் வேண்டும்?”எனக்கூறி, என்னவோ
சுடுசொற்கள் சிலவும் கூறிவிட்டேன். மாமாவின் மணிவாக்கு என்னமோ
உண்மையாய்த்தான் ஆயிற்று. ஆனால் எனது பத்திரிகைத் திட்டந்தான்
பொய்த்துப்போயிற்று."1 டி.கே.சி.புகழ் 'கல்கி'
தேசியவாதிகளாக -விடுதலைப் போராட்ட வீரர்களாக இருந்து தமிழ்ப்
பத்திரிகை உலகில் புகுந்தவர்களிலே பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும்
அந்தத் துறையிலே இரண்டறக் கலந்திருந்தனர். அவர்களில், 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்களாவர்.
ரா. கிருஷ்ணமூர்த்தி, முதலில் தலைவர் ராஜாஜி நடத்திய
'விமோசனம்' மாதப் பத்திரிகையில் துணையாசிரியராகத் தொண்டாற்றினார்.
பின்னர், தமிழ்ப் பெரியார் திரு.வி.கலியாணசுந்தரனார் நடத்திய 'நவசக்தி'
வாரப் பத்திரிகையில் துணையாசிரியராக இருந்து பணிபுரிந்தார். அதன்
பின்னர், திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் 'ஆனந்த விகடன்' பத்திரிகையின்
ஆசிரியரானார். இறுதியாக, திரு.டி.சதாசிவம் அவர்களுடன் சேர்ந்து, 'கல்கி'
வாரப் பத்திரிகையைத் துவக்கி, தம் வாழ்நாள் முடியும்வரை அதன்
ஆசிரியராக இருந்து தமிழ்த் தொண்டில் தலைசிறந்து விளங்கினார்.
இடையில் சிறிது காலம் 'கல்கி' வாரம் மும்முறை இதழையும் தனியாக
வெளியிட்டார்.
ரசிகமணி டி.கே.சி.'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தியின் எழுத்தாற்றல் பற்றித்
தெரிவித்துள்ள கருத்து வருமாறு:
'விகடனில் உள்ள தலையங்கங்களில் அரசியலோ, சமூக
சீர்த்திருத்தமோ, சமயத் திருத்தமோ எதானாலும் சரி, பீரங்கி குண்டுகளைப்
போல் வீசியெறிந்தார். பொதுவாகப் பத்திரிகையில் தலையங்கம் என்றால்
வாசியாமல் விடப்படும் பத்தி. விகடனில் தலையங்கம் வாசியாமல் தீராத
பத்தி."2
டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்கள், சிறைசென்ற தேச பக்தராவார். அவர்,
முதலில் டாக்டர் வரதராசலு நாயுடு நடத்திய 'தமிழ்நாடு'
1.'வி.ஓ.சி.கண்ட பாரதி'; பக்.45-46
2.முருகு சுப்பிரமணியம் எழுதிய 'எழுத்தாளர் கல்கி'; பக்.16.