பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். பின்னர், ‘தினமணி' பத்திரிகை
ஆசிரியராகி, நீண்டகாலம் அதிலே நிலைத்திருந்தார். அதனை விட்ட
பின்னர், தமது சொந்தப் பொறுப்பில் 1943ல் 'தினசரி' என்ற நாளிதழைத்
தொடங்கி, 1952 வரை நடத்தினார். 'தமிழ்நாடு' விலிருந்து வெளியேறிய
பின்னர் சில ஆண்டு காலம் 'காந்தி' என்ற பெயரில் வாரப்
பத்திரிகையொன்றை நடத்தினார். அன்பர் சொக்கலிங்கம் தமிழ்ப்
பத்திரிகையுலகில் 'ஜாம்பவான்' எனத் திகழ்ந்தார். அதனால், 'ஆசிரியர்'
என்ற அடை மொழியையும் தமது பெயருக்கு முன்னே பெற்றார். அவர்
மிகவும் விறு விறுப்பான தமிழ் நடையைக் கடைப்பிடித்து எழுதினார்.
அவர் நடை அவருக்கே சொந்தம். ஒன்றைத் தாங்கியும் இன்னொன்றைத்
தாக்கியும் எழுதும் பிரசார பாணியிலே பிற எழுத்தாளர்களுக்கு அவர்
முன்னோடியாக விளங்கினார்.ஏடு நடத்துவதிலும் புரட்சி
தமிழ் பத்திரிகையுலகில் புதுமைகளையும்- புரட்சிகளையும் விளைவித்த
தேசபக்தர்கள் பலராவர். அதிலேயும் தேசபக்தர் சிதம்பரனார்
முன்னோடியாக விளங்கினார். 1908 ஆம் ஆண்டிலே, பெருநாவலர்
விபினசந்திர பாலர் சிறையிலிருந்து விடுதலையாக இருந்த நாளிலே,
'சுயராஜ்யம்' என்ற பெயரில் தமிழ் பத்திரிகையொன்றைத் தொடங்க
வ.உ.சிதம்பரனார் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த முயற்சிக்கு அரசு
தடை விதித்தது. அதனை மீறி பத்திரிகையை வெளியிட வ.உ.சி ஏற்பாடு
செய்தார்.
சட்ட விரோதப் பத்திரிகையை விற்பதற்கு வ.உ.சி. ஒரு புதுமுறையை
விளம்பரப்படுத்தியிருந்தார். அதாவது, 'சுயராஜ்யம்' என்ற வாக்கியம்
பொறித்த கொடி பறக்கும் வீடுகளுக்கே பத்திரிகை விற்கப்படுமென்று
அறிவித்திருந்தார். அதற்குள் தடையை மீறி ஊர்வலமும் பொதுக்கூட்டமும்
நடத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு விட்டதால், 'சுயராஜ்யம்'
வெளிவரவில்லை.
அந்நாளில், தீவிர தேசபக்தர்களால் நடத்தப்பட்ட எந்த
ஒரு பத்திரிகையும் லாபம் தருவதாக இருக்கவில்லை.
வணிகர்கள் தரும் விளம்பரங்களைப் பிரசுரிப்பதால் நஷ்டத்தை ஓரளவு
குறைத்துக் கொள்ள முடிந்தது. இந்த நிலையில், தேசியப் பத்திரிகை
களிலே விளம்பரங்களுக்கென இடம் ஒதுக்குவதற்கு காந்தியடிகள்