பதிப்பித்து வெளியிடவேண்டும் என்ற சுவப்பனமும் இருந்து வருகிறது."1 ஐயரின் கனவு நனவாக அவருக்கு வசதிகள் கிடைத்திருந்தால்,
தமிழ்மொழி அவர் காலத்திலேயே பலவகையிலும் முன்னேற்ற
மடைந்திருக்கும். அவருக்கு வசதிகள் கிடைக்கவில்லையென்பதோடு,
கிடைப்பதற்கான காலம் வரும்வரை வாழவும் அவர் கொடுத்து
வைக்கவில்லை.
வ. வே. சு. ஐயர், தமிழக சரித்திர நாயகர்களை யெல்லாம்
கதாநாயகர்களாக்கி, தமிழினத்திற்கு உயர்வு தேடத் திட்டம் வகுத்திருந்தார்.
அதுபற்றி அவரே கூறக்கேட்போம்:
"எல்லாவற்றையும் விட ஒரு பெரிய நோக்கம் வைத்திருக்கிறேன்.
அதாவது, தூமாஸ், பிரெஞ்சு சரித்திர மனைத்தையுமே கற்பனைக்
கதைகளாகச் செய்து சரிபண்ணிப் பிரெஞ்சுக்காரனையும் தன் தேச சரித்திர
விஷயத்தில் கற்றவனாயும் உற்சாகியாயும் ஆக்கிவிட்டதைப் போல்,
தமிழ்நாட்டுச் சரித்திரமனைத்தையும் கற்பனைக் கதைகளாகச் செய்யவேண்டு
மென்றிருக்கிறேன்.
பாரியும், நன்னனும், கபிலரும், நக்கீரரும், கரிகாலனும், செங்குட்டுவனும்,
ராஜ ராஜனும், ராஜேந்திரனும், விஜயபாலனும்,சுந்தர மூர்த்தி நாயனார் முதலிய
நாயன்மார்களும், குலசேகரன், ராமானுஜன், தேசிகர் முதலிய வைஷ்ணவ
ஆச்சாரிய மகான்களும் நமது கதைத் தொடரில் நாயகர்களாக விளங்கி,
காம்பீர்யம் முதலிய பௌருஷமான ரசங்களுக்கு நிலையமாக நின்றால்,
அடுத்த தலைமுறை முதல் தமிழ் இலக்கியத்தையும் தமிழ்ச் சரித்திரத்தையும்
யார் அவமதிப்பார்? அது சாத்தியமானால், இப்பேர்ப்பட்ட வீர தீரர் பிறந்து
வளர்ந்து இறந்த நாட்டில் நாம் பிறக்கச் செய்த புண்யமே புண்யமென்றும்,
நாம் அவர்களுக்கேற்ற சந்ததியாகக் கடவோம் என்றும், எண்ணங்கள்
தமிழருள் தோன்றி மற்ற மாகாணங்களில் பிறந்து கொண்டிருக்கும் (உப
யோகமில்லாததுபோல்) தீரயுகம் பிறக்க வழிகாட்டியாக நாம் அமைந்து
விடுவோம்.1
1. 'சித்திரபாரதி', பக்.117-18.2. வெ.சாமிநாத சர்மா எழுதிய 'நான் கண்ட நால்வர்', பக்.148-49.)