கொடுத்துள்ளோம் என்று அவர் நினைத்தார். இந்தத் திட்டத்தை
வகுத்தவர்களில் பெரும்பாலோர்க்கு நமது மதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.
நமது வேத சாஸ்திர நூல்கள் எல்லாம் வெறும் மூட நம்பிக்கைகளின்
தொகுப்புக்களே என்று கருதப்பட்டன. நமது நாகரிகம் தீமைகள் நிறைந்ததாக
இருக்கிறது என்று அவர்களுக்குத் தோன்றியது. நாம் பலவீனமான
பின்தங்கிய ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களாகையால், நம்முடைய சமூகம்
முதலிய மற்ற ஸ்தாபனங்களில் பல குறைபாடுகள் இருக்க வேண்டுமென்று
கருதப்பட்டது. ஆகையால் அவர்களுடைய நோக்கம் நேர்மையானதாக
இருக்கலாம் என்றாலும், தவறான ஒரு திட்டத்தை அவர்கள் வகுத்தார்கள்.
தங்களைச் சுற்றியுள்ள உடனடியான தேவைகளில் மட்டுமே அவர்கள் கவனம்
செலுத்தினார்கள். ஆகையால், இந்தப் பிரச்சனையை அவர்கள் ஆழ்ந்து
பரிசீலனை செய்யவில்லை. புதிய ஆட்சியாளர்களுக்கு உதவி செய்வதற்கு
வக்கீல்கள், வைத்தியர்கள், குமாஸ்தாக்கள் முதலியவர்கள் வேண்டியிருக்கு
மென்பதும், மக்களுக்கு இந்தப் புதிய விஷயங்களில் பயிற்சி
அளிக்கவேண்டுமென்பதுமே அவர்களது திட்டத்தின் நோக்கமாகும். இதன்
விளைவாக,நம்முடைய தேவைகளையோ, சூழ்நிலையையோ கொஞ்சம் கூட
கவனிக்காமல் பாடப்புத்தகங்கள் எழுதப்பட்டன."1 தேசியக் கல்வி நிறுவனங்கள்
பிரிட்டிஷார் திணித்த கல்விமுறைக்கு எதிராக தேசியக் கல்வியை
நடைமுறைக்குக் கொண்டுவர முயன்றனர் தேசியவாதிகள்.
ஒரு தேசியப்பள்ளி எப்படி நடத்தப்படவேண்டும் என்பது பற்றி
காந்தியடிகள் தந்த விளக்கம் வருமாறு:
"ஒரு பள்ளிக்கூடத்தை 'தேசியப்பள்ளிக்கூடம்' என்று சொல்ல
வேண்டுமானால், அது பின்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.”
"அன்றாட மாமூல் வேலையில் நூல் நூற்றலுக்கு இடமிருக்க வேண்டும்.”
1. காந்தி நூல்கள் தொகுதி 12;பக்.33-34.