பக்கம் எண் :

288விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     "ஆசிரியர்களும்    மாணவர்களும்    தினசரி    அரைமணி   நேரம்
நூற்கவேண்டும்.”

     "அவர்கள்   கதரை  மட்டுமே  அணிபவர்களாக  இருக்க  வேண்டும்.”

     "தாய்மொழி அல்லது இந்துஸ்தானியின் வாயிலாக பாடங்கள்  சொல்லிக்
கொடுக்கப்படவேண்டும்.”

      "உடற்பயிற்சிக்கு    முழு    முக்கியத்துவம்   அளிக்க   வேண்டும்.”

     "தற்காப்புப்    பயிற்சியும்    அதில்    சேர்ந்திருக்க     வேண்டும்.”

     "தனக்குத்  தெரிந்த  வழியில் இந்துக்கள், முஸ்லிம்களின் உள்ளங்களை
ஒன்றுபடுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.”

      "தீண்டாதார்கள்  உள்ளே  வரக்கூடாது  என்று  கதவை   அடைத்து
விடாமல், அவர்களை வரவேற்க வேண்டும்.”1

      இந்தியாவின் வரலாற்றிலே ஒன்றன்பின் ஒன்றாக பல படையெடுப்புகள்
நிகழ்ந்துள்ளன. அவற்றுள் மொகலாயர் படையெடுப்பும் ஒன்றாகும்.

     அன்னிய  மொழியும்   அன்னிய  மதமுமேயன்றி,  அம்மொழியினரின்
-மதத்தினரின்   கலாச்சாரமும்   இந்திய  சமுதாயத்தின்  மீது    ஆதிக்கம்
பெற்றதுண்டு.  ஆனால்,  அந்த மொகலாயர் ஆட்சிக்காலத்தில் கூட இந்திய
சமுதாயத்தின்  ஆன்மாவை  அடிமைப்படுத்தும்  முயற்சி நடைபெற்றதில்லை.
ஆனால்,  பிரிட்டிஷ்  ஆட்சிக்காலத்திலே - மெக்காலே   கல்வித்திட்டத்தின்
மூலம் -  இந்திய  மக்களின் பூர்வீக கலாச்சாரத்தை அழித்து, அவர்களுடைய
ஆன்மாவையும்   அடிமைப்படுத்தும்   முயற்சி   நடைமுறைக்கு     வந்தது.
அதனாற்றான்,   அரசியல்   சுதந்திரத்திற்குப்   போராடும்   காலத்திலேயே
காங்கிரஸ்  மகாசபை.  அதற்காகவே மெக்காலே கல்வித் திட்டத்தை எதிர்த்து,
அதனை   அழித்தொழிக்க   தேசியக்   கல்வித்திட்டத்தைச்   செயல்படுத்த
முனைந்தது.

ஆன்மிக சுதந்திரம்

     அரசியல்   தலைவர்களாக   மட்டுமன்றி,   ஆன்ம    ஞானியராகவும்
விளங்கிய   காந்தியடிகள்,   லோகமான்ய    பாலகங்காதர    திலகர்,  கவி


1. காந்தி நூல்கள் தொகுதி; பக்.366.