தேசியக் கல்வி நிலையங்கள் எவ்வளவுதான் திறமையின்றி நடத்தப்பட்டாலும்,
நம்முடைய சுதந்திரத்திற்கான முதல் கருவிகள் செய்யப்படும்
தொழிற்சாலைகளாக இருக்கின்றன."1 "இந்திய இளைஞர்கள் அவர்களுடைய அடிமைத்தனத்தின்
கோட்டைகளில் இருந்து-அதாவது, அவர்களுடைய பள்ளிக் கூடங்களிலும்,
கல்லூரிகளிலுமிருந்து வெளியேறிவிடுமாறு அழைக்கிறேன். அடிமை
விலங்குகளால் கட்டப்பட்டு, இலக்கியக்கல்வி கற்கப் போவதைவிட, சுதந்திரம்
பெறுவதற்காக எழுத்து வாசனையே இல்லாதவர்களாகக் கல்லுடைத்துப்
பிழைப்பது எவ்வளவோ மேலாகும்."2
வித்யா பீடங்கள்
அரசாங்கக் கல்லூரிகளை பகிஷ்கரித்து வெளியேறிய மாணவர்கள்,
தேசியக்கல்வி பயிற்றுவிக்கும் கல்வி நிலையங்களில் சேர்ந்தனர்.
மாநிலந்தோறும் - நாட்டின் பல பகுதிகளிலே தேசியக் கல்விக்கான
ஆரம்பபள்ளிகளும், நடுத்தரப் பள்ளிகளும், கல்லூரிகளும் தோற்றுவிக்கப்
பெற்றன. குஜராத், பீகார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலே
'வித்யா பீடம்' என்ற பெயரில் பல்கலைக் கழகங்களும் அமைக்கப்பெற்றன.
குஜராத் வித்யாபீடம், பீகார் வித்யா பீடம், காசி வித்யா பீடம், திலகர் ஐயா
பீடம், ஜமீயா மில்லியா ஆகியவற்றை காங்கிரஸ் மகாசபையே நேரடியாகப்
பொறுப்பேற்று நடத்தியது. இப்படி, மாபெரும் அரசியல் அமைப்பொன்று -
அதுவும் அன்றைய ஆட்சிக்கு எதிராக புரட்சிக்காரர்களால் நடத்தப்பெற்ற
காங்கிரஸ் மகாசபை - கல்வித்துறையிலே ஈடுபடுவதனை மகாகனம்
வி. எஸ். சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் வெறுத்தனர். அறிக்கைகள்
வெளியிட்டு எதிர்ப்புக் காட்டினார். ஆங்கில மொழியின்பால் பற்றுக்கொண்ட
இவர்கள் எதிர்ப்புக்கு தேசியவாதிகள் மதிப்பளிக்கவில்லை.
குஜராத் வித்யா பீடந்தான் இந்தியாவிலேயே தேசியவாதிகள்
தோற்றுவித்த முதல் தேசியப் பல்கலைக்கழகமாகும். இதனைத்
துவக்குவதற்கான ஆரம்ப முயற்சிகளில் காந்தியடிகள் நேரடியாகப்
பங்குகொண்டார். அவர், குஜராத் வித்யாபீடத்தின் முதல் துணை
1. காந்திநூல்கள் தொகுப்பு 12; பக்.138 2. காந்திநூல்கள் தொகுப்பு 12; பக்.388