பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 297

வேந்தராகவும்  இருந்தார். குஜராத்தி  மொழி அகராதி வெளிவரவும் முயற்சி
எடுத்து, அதிலே வெற்றியும் கண்டார்.

     பீகார் வித்யாபீடத்தை துவக்குவதற்கான பொறுப்பனைத்தையும் டாக்டர்
இராஜேந்திர  பிரசாத்   மேற்கொண்டார்.  ஒத்துழையாமையில்  ஈடுபட்டதன்
காரணமாக  வக்கீல்  தொழிலைத்  துறந்த அவர்,  பீகார் வித்யா  பீடத்தைத்
திறம்பட  நடத்தும்  பொருட்டு,  தமது  இல்லத்தைத் துறந்து பல ஆண்டுகள்
வித்யா பீடத்திலேயே தங்கி வாழ்ந்தார்.

      ஜமீயா மில்லியா  பல்கலைக்  கழகத்தைத்  தொடங்கும்  பொறுப்பை
டாக்டர்.  ஜாகீர்  உசேன்   ஏற்றுக்கொண்டார்.   அவரே  அதன்   துணை
வேந்தராகவும் இருந்து பணியாற்றினார்.

     இந்தச் தேசிய வித்யா பீடங்களின் குறிக்கோள்கள் வருமாறு:

     "சுயராஜ்யம்   பெறுவதற்கான  இயக்கங்களை நடத்துவதற்குத் தேவைப்
படும் நல்லொழுக்கம், திறமை, கல்வி, மனச்சாட்சி ஆகியவை  உள்ள ஊழியர்
களைத் தயாரிப்பதே வித்யாபீடத்தின் முக்கிய நோக்கமாகும்.

     "வித்யா  பீடத்தினால்  நடத்தப்படும் எல்லா அமைப்புகளும், அத்துடன்
இணைக்கப்பட்ட   பிற   அமைப்புகளும்   ஒத்துழையாமையிலீடுபட்டிருக்கும்;
ஆகையால்   அரசிடமிருந்து     எந்த   விதமான  உதவியையும்   அவை
பெறமாட்டா.

      "மாநிலத்தின்   மொழியே   வித்யா  பீடத்தின்  முக்கிய  மொழியாக
இருக்கும். அதுவே போதனா மொழியாகவும் இருக்கும்."1

      விடுதலைப்  போரின்  தளபதிகளாகத் திகழ்ந்த பெருந்தலைவர்களிலே
பலர்,  தத்தம் பிள்ளைகளைக் கல்லூரிகளில் இருந்து வெளியேற்றினர் என்பது
இங்கு  குறிப்பிடத்தக்கதாகும்.  காந்தியடிகள்,   தாம்   தென்னாப்பிரிக்காவில்
வாழ்ந்த   காலத்திலேயே   -   சத்தியாக்கிரக   நெறிப்படி  -  தம்முடைய
பிள்ளைகளை    அரசாங்கக்    கல்வி    நிலையங்களுக்கு    அனுப்பாமல்,
சத்தியாக்கிரக  ஆசிரமத்தில்  வைத்து,  தாய்மொழியின்  வாயிலாகவே கல்வி
கற்பித்தார்.

      குஜராத்   வித்யாபீடம்    போன்ற    தேசியப்   பல்கலைக்  கழகம்
ஒன்றைத்    தமிழ்நாட்டில்   நிறுவ   தமிழகத்    தலைவர்களிலே  எவரும்


1. காந்தி நூல்கள் தொகுப்பு 12; பக்.388.