"கூர்தல் அறத்தை டார்வின் ஆராய்ச்சி கொண்டு முதல் முதல் எனக்கு
அறிவுறுத்தியவர் தோழர் எம்.சிங்காரவேல் செட்டியார்."1
"கூர்தல் அறம் (Evolution) உலகை வளர்த்து வருகிறது. உலக
வளர்ச்சிக்கென்று, கூர்தல் அறம் இயற்கையில் அமைந்துள்ளது."2
சிங்காரவேல் செட்டியார் டார்வின் கண்ட உண்மையையும் பிறர்
கண்ட நுட்பங்களையும் அறிவுறுத்தும் தொண்டில் ஈடுபட்டார். அத்தொண்டு
என் போன்றார்க்குப் பெரும் பயன் விளைத்தது.
"எனது வாழ்க்கை தொடக்கத்தில் சமயப்பணியில் ஈடுபட்டது. அதனால்
பல சமய ஆராய்ச்சிப்பேறு எனக்குக் கிடைத்தது. அவ்வாராய்ச்சி பொதுமை
உணர்ச்சியை உண்டாக்கியது. சமயங்களின் அடிப்படையாயுள்ள
பொதுமை-சமரசம்-ஏன் உலகில் பரவவில்லை என்று யான் எண்ணுவேன்;
சிற்சிலபோது ஆழ எண்ணுவேன். எனக்கு ஒன்றும் விளங்குவதில்லை.
சிங்காரவேல் செட்டியார் கூட்டுறவு சிறிது விளக்கஞ் செய்தது. அவ்விளக்கம்
பொதுமையை உலகில் பரப்பி நிலைநிறுத்த வல்லது. கார்ல்மார்ஸ் கொள்கை
என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் இடம் பெறச் செய்தது."3
கோமளீசுவரன்பேட்டைப் புதுபேட்டையிலே ஒரு பௌத்த சங்கம்
கூடிற்று. அதிலே, இலட்சுமிநரசுநாயுடு, சிங்காரவேல் செட்டியார் முதலியோர்
பேசுகின்றனர் என்று கேள்வியுற்றேன். யான் கூட்டத்துடன் அங்கு சென்றேன்.
"சிங்காரவேல் செட்டியார் டார்வின் கொள்கையைத் தமிழில்
விளக்கினார். என் உள்ளம் அதில் ஈடுபட்டது... யான் செட்டியாரின் மாணாக்கனானேன். செட்டியார் ஆசிரியரானார். டார்வின் கொள்கை எனது
பின்னைய சமய ஆராய்ச்சிக்குப் பெருந் துணையாயிற்று."4
தோழர் சிங்காரவேல், பொதுவுடைமைப் புதுவுலகத்தின் பூங்காவாகக்
கருதப்படும் சோவியத் ருஷ்யா பற்றியும், அந்த நாட்டில் நடந்த வர்க்கப்
புரட்சி பற்றியும், அந்தப் புரட்சிக்கு வழிகாட்டிய 'மார்க்ஸியப்
பாதையிலே பாட்டாளி வர்க்கப் படையை நடத்திச்சென்று
1. திரு.வி.க.வா.கு.; பக் 579
2. திரு.வி.க.வா.கு.; பக் 618-619
3. திரு.வி.க.வா.கு.; பக் 3
4. திரு.வி.க.வா.கு.; பக் 106