பக்கம் எண் :

310விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

மாகக்கூட   இதுவரை  தமிழில் வெளிவரவில்லை. ஆம்; விடுதலைப் போரின்
வலிமை   மிக்க    இரண்டாவது   முனையாகத்    திகழ்ந்த   தொழிலாளர்
எழுச்சியின்   பெயரால்   கவிதைகளாகவும்  கதைகளாகவும்   வரலாறாகவும்
எவ்வளவு   இலக்கியங்கள்  தமிழில்  வந்திருக்க வேண்டுமோ, அவ்வளவுக்கு
வரவில்லை. தமிழ்ப்  பெரியார் திரு.வி.க.கூட,  அத்துறையில்   தமது  எழுது
கோலைப்  பயன்படுத்தாதது ஒரு குறைதான். அந்தக் குறையை அவரேஒப்புக்
கொண்டுள்ளார்.

      "இந்தியத்  தொழிலாளர்  இயக்க வரலாறு சிலரால் எழுதப்பட்டுள்ளது;
அவ் வரலாறுகளில்  ஆரம்ப  நிகழ்ச்சிகள்  சில  திரிபாக எழுதப்பட்டுள்ளன.
சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சிகள் சில விடப்பட்டுள்ளன. இடைஇடை நேர்ந்த
இடர்களும் காரணங்களும் இன்னும் எவராலும் விளக்கப்படவில்லை. இயக்கத்
தோற்றத்திலும்  தொடர்ந்தும்  ஈடுபட்டவருள்  யானும்  ஒருவனாதலின்  பல
உண்மைகள்  எனக்குத் தெரியும்.  அவைகளை   எல்லாம் நிறைவாகக் கூறச்
சமயமும் வாய்ப்பும் என்று கிடைக்குமோ அறிகிலேன்."1

      'லேபர்    இன்    மெட்றாஸ்'    என்ற   பெயரில்   ஆங்கிலத்தில்
திரு.பி.பி.வாடியா  என்பவர்  ஒரு  நூல்  எழுதியுள்ளார்.  அது,   சென்னை
திருவல்லிக்கேணி  எஸ்.கணேசன்  கம்பெனியாரால் வெளியிடப் பெற்றுள்ளது.
அந்த நூல்கூட, தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.

     தென்  பாண்டிப்பதி  தந்த  விடுதலை  வீரர்களிலொருவரான  தோழர்
ப.ஜீவனாந்தம்,  நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, பாட்டாளி  வர்க்கத்தின்
விடுதலைக்காகவும்  பாடி வைத்துள்ள  பாடல்கள் பலவாகும். பாமர மக்களின்
இதயங் கவரும் சந்தங்களைக் கொண்டு, எளிய நடையில் இவர்  இயற்றியுள்ள
பாடல்கள் அந்நாளில்  தேசிய மேடைகளிலும் தொழிற்சங்கக்  கூட்டங்களிலும்
பலரால் பாடப்பெற்றன."காலுக்குச் செருப்புமில்லை; கால்வயிற்றுக் கூழுமில்லை"
என்ற பாடல்,  வீரர்   ஜீவாவை    உணர்ச்சிமிக்க    கவிஞராக   உலகுக்கு
அறிமுகப்படுத்தியது. அப்பாடலின் சில வரிகளைப் பார்ப்போம்:


1. திரு.வி.க.வின் 'இந்தியாவும் விடுதலையும்'; பக்.342-43