பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 311

    காலுக்குச் செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமில்லை
    பாழுக் குழைத்தோமடா-என் தோழனே!
    பசையற்றுப் போனோமடா!

    குண்டிக்கொரு துண்டுமில்லை கொல்வறுமை தாளவில்லை
    ஒண்டக் குடிசையில்லை-என் தோழனே!
    உழைத்திளைத்துப் போனோமடா!

    பாலின்றிப் பிள்ளையழும் பட்டினியால் தாயழுவாள்
    வேலையின்றி நாமழுவோம்-என் தோழனே!
    சூடும் அழும்.

     ராஜாஜி  அவர்கள்   எழுதி   வெளியிட்டுள்ள "அபேதவாதம் அல்லது
பொதுவுடைமை"  என்ற    நூல்,   சோஷலிச  இலக்கியக்    களஞ்சியத்தில்
சேர்க்கத்தக்க சிறப்புடையதாகும்.