பக்கம் எண் :

காரிகைப் படம் 137

“என் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதோ” என்ற
பயத்தோடு நான் மெல்லப் புஸ்தகத்தைப் பிரித்தேன். பிரிக்கும் போதே என்
மனம் திக்குத் திக்கென்று அடித்துக் கொண்டது நல்ல பாடலாக
வரவேண்டுமே!’ என்ற கவலையோடு அப்பக்கத்தைப் பார்த்தேன்.

“சீதமணி மூரல்திரு வாய்சிறி தரும்ப
மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான்
நாதமுடி வாயளவி னான்மறையி னந்தப்
போதவடி வாகிநிறை பூரணபு ராணன்”

என்ற பாட்டைக் கண்டேனோ இல்லையோ எனக்கு மயிர்க்
கூச்செறிந்தது. என் கண்களில் நீர் துளித்தது மிகவும் நல்ல நிமித்தம்
உண்டாகிவிட்டது. ஒரு குருவை வேண்டி நின்ற எனக்கு, தக்ஷிணாமூர்த்தியாகிய
குருமூர்த்தி வெளிப்பட்டதைத் தெரிவிக்கும் செய்யுள் கிடைத்ததென்றால்,
என்பால் பொங்கிவந்த உணர்ச்சிக்கு வரம்பு ஏது? “கடவுள் எப்படியும்
கைவிடார்” என்ற நம்பிக்கை உதயமாயிற்று. “மதுரை மீனாட்சி சுந்தரக் கடவுள்
முனிவர்களுக்கு அருள் செய்தார். எனக்கும் அந்தப் பெருமான்
திருநாமத்தையுடைய தமிழாசிரியர் கிடைப்பார்” என்ற உறுதி உண்டாயிற்று.
என் தந்தையார் பூஜையிலுள்ள மூர்த்தியும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரக் கடவுளே
என்ற நினைவும் வந்து இன்புறுத்தியது. உவகையும் புதிய ஊக்கமும் பெற்றேன்.
இந்நிகழ்ச்சியை என் தந்தையாரிடம் கூறினேன். அவரும் பெரு மகிழ்ச்சி
அடைந்தார்.

“எவ்வாறு அவர்களிடம் போய்ச் சேர்வது? செலவுக்கு என்ன செய்வது?
தனியே போய் இருக்க முடியுமா?” என்ற கேள்விகள் எழுந்து
பயமுறுத்தினாலும், திருவிளையாடற் பாட்டின் தோற்றம் அந்தப் பயத்தை
மேலெழும்ப வொட்டாமல் அடக்கி நின்றது. அருணோதயத்தை எதிர்
பார்க்கும் சேவலைப்போல நல்ல காலத்தை எதிர்பார்த்து நாட்களைக் கழித்து
வந்தேன்.

அத்தியாயம்-24

காரிகைப் பாடம்

குன்னத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டினராகிய ராமையங்கார் எனது
நிலையை அறிந்து மிகவும் இரங்கினார். அப்பால் ஒரு