பக்கம் எண் :

நான் கொடுத்த வரம் 231

தது. கோவில் பிரசாதங்கள் மிகவும் சுவையாகவும் பரிசுத்தமாகவும்
இருக்குமென்ற எண்ணத்தால் என் நாக்கில் ஜலம் ஊறியது. காரியஸ்தர் மிக்க
விநயத்தோடு என்னை அழைத்துச் செல்லும் போதே, நம்முடைய பசிக்கும்
ருசிக்கும் ஏற்ற உணவு கிடைக்கும் என்ற ஆவலோடு சென்றேன்.

மடைப்பள்ளியில் வழி தெரியாதபடி இருட்டாக இருந்தது. தட்டுத்
தடுமாறி உள்ளே போனவுடன், காரியஸ்தர் என்னை ஓரிடத்தில் உட்காரச்
சொல்லி அருகில் ஒரு கை விளக்கைக் கொணர்ந்து வைத்தார். அவர்
உத்தரவுப்படி ஒருவர் ஒரு பெரிய தட்டில் பல வகையான பிரசாதங்களை
எடுத்து வந்து என் முன்னே வைத்தார்.

அந்தத் தட்டைப் பார்த்து மலைத்துப் போனேன். “இவ்வளவு எதற்கு?”
என்று கேட்டேன். “ஒவ்வொன்றிலும் கொஞ்சங் கொஞ்சம் சாப்பிடுங்கள்”
என்று காரியஸ்தர் சொன்னார்.

“என்ன என்ன பிரசாதங்கள் வந்திருக்கின்றன?” என்று கேட்டேன்.

“சர்க்கரைப் பொங்கல் இருக்கிறது; புளியோரை இருக்கிறது; சம்பா
வெண் பொங்கல், எள்ளோரை, உளுத்தஞ் சாதம் எல்லாம் இருக்கின்றன.
பாயசம் இருக்கிறது; பிட்டு இருக்கிறது; தேங்குழல், அதிரஸம், வடை, சுகியன்
முதலிய உருப்படிகளும் இருக்கின்றன” என்று அவர் அடுக்கிக் கொண்டே
போனார். இயல்பாகவே பிரசாதங்களில் எனக்கு விருப்பம் அதிகம்; பசியும்
சேர்ந்ததால் அவர் சொல்லச் சொல்ல உடனே சாப்பிட வேண்டுமென்ற வேகம்
எனக்கு உண்டாயிற்று.

தெய்வப் பிரசாதம்

மடைப் பள்ளியில் இலை போட்டு உண்பதும் எச்சில் செய்வதும்
அனாசாரம்; ஆகையால் கையில் கொடுத்தால் எச்சில் பண்ணாமலே
உண்பேனென்று நான் சொல்லிவிட்டு முதலில் புளியோரையைக் கொடுக்கும்படி
கேட்டேன். உடனே காரியஸ்தர் என் கையில் சிறிது புளியோரையை எடுத்து
வைத்தார். மிக்க ஆவலோடு கொஞ்சம் எடுத்து வாயிலே போட்டுக்
கொண்டேன். வெறும் புளிப்பு மாத்திரம் சிறிது இருந்தது; உப்பு இல்லை;
காரமோ எண்ணெயின் மணமோ தெரியவில்லை. “என்ன இது?” என்று
கேட்டேன். “இதுவா? இதுதான் புளியோரை” என்றார் அவர்.

நான் வாயில் போட்ட பிரசாதத்தில் கல் இருந்தது; உமியும் இருந்தது.
அவற்றை வெளியே துப்புவதற்கு வழியில்லை. மடைப்