பக்கம் எண் :

பிரசங்க சம்மானம் 375

விடுகிறேன்” என்று ஆசிரியரிடம் சொன்னேன். அவருக்கு விடை
கொடுக்க மனம் வரவில்லை; என் பிரயாணத்தைத் தடுக்கவும் மனமில்லை. “சரி,
போய்வாரும், சீக்கிரம் வந்துவிடும்” என்றார். அன்றியும், “வழிச் செலவுக்கு
வைத்துக்கொள்ளும்” என்று என் கையில் ஒரு ரூபாயை அளித்தார். பிறகு
காரைக் கிருஷ்ணசாமி ரெட்டியாருக்கு, “சாமிநாதையரைக் கொண்டு
புராணத்தை விரைவில் நிறைவேற்றித் தாமதிக்காமல் அனுப்பி விடுக” என்று
ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். வழக்கம் போல் அதன் தலைப்பில் அவர்
விஷயமாக ஒருபாடலை இயற்றி எழுதுவித்தார்.

நான் அவரைப் பிரிதற்கு மனமில்லாமலே விடைபெற்றுக் காரை வந்து
சேர்ந்தேன்.

அத்தியாயம்-61

பிரசங்க சம்மானம்

காரைக்கு வந்தவுடன் திருவிளையாடற்புராணப் பிரசங்கத்தைப் பூர்த்தி
செய்யும் விஷயத்தில் எனக்கு வேகம் உண்டாயிற்று. “இன்னும் கொஞ்சநாள்
பொறுத்தால் அதிகத் தொகை சேரும்” என்று சிலர் கூறினர். “கிடைத்தமட்டும்
போதுமானது” என்று கிருஷ்ணசாமி ரெட்டியாரிடம் சொன்னேன்.

பிள்ளையவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தைக் கண்டு அவர் அளவற்ற
ஆனந்தமடைந்தார். அவர் விஷயமாக அப்புலவர் பிரான் எழுதியிருந்த
பாட்டைப் படித்துப் படித்துப்பெறாத பேறு பெற்றவரைப் போலானார்.
“உங்களுடைய சம்பந்தத்தால் அம்மகா கவியினுடைய திருவாக்கால் பாடப்
பெற்ற பாக்கியத்தை அடைந்தேன். நான் எங்கே! அவர்கள் எங்கே! முன்பு
தெரியாதவர்களாக இருந்தும் என்னை ஒரு பொருளாக எண்ணி இதை
எழுதியிருக்கிறார்களே! அம் மகானை நேரில் தரிசித்து மகிழ்வுறும் சமயமும்
கிடைக்குமா?” என்று கூறிப் பாராட்டினார்.

கிருஷ்ணசாமி ரெட்டியார் அன்பு

அதுதான் சமயமென்று எண்ணிய நான், “அவர்கள் என்னை விரைவில்
வந்துவிடும்படி கட்டளை யிட்டிருக்கிறார்கள். உங்களுக்கு எழுதிய கடிதத்திலும்
அதைத்தான் வற்புறுத்தியிருக்கிறார்கள்” என்றேன். பிள்ளையவர்கள் தம்மேல்
ஒரு பாடல் எழுதியிருப்பதை