பக்கம் எண் :

இரட்டைத் தீபாவளி 381

மடத்திற்குச் சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்தேன்.

“பல மாதங்களாக உம்மைக் காணவில்லையே! பிள்ளையவர்கள்
அடிக்கடி உம்மைப் பற்றிப் பிரஸ்தாபிப்பார்கள். சௌக்கியந்தானே?” என்று
தேசிகர் கேட்டார்.

நான் உசிதமாக விடை கூறினேன். பிறகு, “பிள்ளையவர்களுக்கு
உம்மைப்போல ஒருவர் எப்போதும் அருகில் இருக்க வேண்டும். அவர்களுக்கு
முன்பு போலத் தேக சௌக்கியம் இல்லை. பாடம் சொல்லும் விஷயத்தில்
அவர்களுக்கு அதிகச் சிரமம் கொடுக்கக் கூடாது. அவர்களிடம் கேட்க
வேண்டிய பாடங்களை நீரும் பிறரும் கேட்டு வாருங்கள். நூதனமாக
வந்தவர்களுக்கு உம்மைப் போன்ற பழைய மாணாக்கர்கள் பாடம் சொல்லலாம்.
பிள்ளையவர்களுக்கும் சிரமபரிகாரமாக இருக்கும். மடத்தில்
மாணாக்கர்களுடைய கூட்டம் அதிகமாக இருப்பதைக் காண்பது நமக்கு
எவ்வளவோ சந்தோஷமாக இருக்கிறது” என்று தேசிகர் அன்போடு
மொழிந்தார்.

கம்ப ராமாயணப் பாடம்

நான் பணிவாக விடைபெற்றுப் பிள்ளையவர்களைச் சார்ந்தேன். கம்ப
ராமாயணம் பாடம் கேட்க வேண்டுமென்று எனக்கிருந்த விருப்பத்தை
ஆசிரியரிடம் புலப்படுத்தினேன். குமாரசாமித் தம்பிரானும் சவேரிநாத
பிள்ளையும் வேறு சிலரும் என்னோடு சேர்ந்து கேட்டுக் கொண்டனர்.
ஆசிரியர் எங்கள் விருப்பத்திற்கு இணங்கி அப்பெரிய காவியத்தை
முதலிலிருந்தே பாடம் சொல்லத் தொடங்கினார்.

அத்தியாயம்-62

இரட்டைத் தீபாவளி

எங்கே பார்த்தாலும் விஷபேதியின் கொடுமை பரவியிருந்தது.
திருவாவடுதுறையைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் அந்நோய்க்கு இரையானவர்கள்
பலர். திருவாவடுதுறையிலும் சிலர் இறந்தனர். அதுகாறும் அத்தகைய நோயை
அறியாத ஜனங்கள், “காலம் கெட்டுவிட்டது. கலி முற்றுகிறது. தர்மம் அழிந்து
வருகிறது. அதனால்தான் இக்கொள்ளை நோய் வந்திருக்கிறது” என்று