பக்கம் எண் :

450என் சரித்திரம்

புரம். அதில் அவரால் நிருமிக்கப்பட்ட செவந்தீசுவரம் என்ற ஆலயம்
ஒன்று உண்டு.

வேணுவனலிங்கத் தம்பிரான் அங்கே கட்டிய மடாலயத்திற்கு
‘சுப்பிரமணிய தேசிக விலாசம்’ என்று பெயர் வைத்ததோடு ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய திருவுருவம் ஒன்று அமைத்துப் பிரதிஷ்டை செய்து பூஜை
செய்யும்படி ஏற்பாடு செய்தார். தேசிகரே நேரில் எழுந்தருளிய தினத்தில்
அவருக்கு உண்டான இன்பத்துக்கு அளவில்லை. அன்றைத் தினம் ஒரு பெரிய
திருவிழாவாகவே கொண்டாடப் பெற்றது.

அந்த அழகிய மடாலயத்தைச் சிறப்பித்து வித்துவான்கள் பலர்
செய்யுட்களை இயற்றியிருந்தனர். அன்றிரவு பட்டணப் பிரவேசம் ஆனவுடன்
இரவு இரண்டு மணிக்கு மேல் எல்லாச் செய்யுட்களையும் தேசிகர்
முன்னிலையில் பல வித்துவான்களும், பிரபுக்களும் கூடியிருந்த சபையில் நான்
படித்தேன். சிலர் தாங்கள் இயற்றிய பாடல்களின் நயங்களைத் தாங்களே
எடுத்துக் காட்டினர். எல்லாம் படித்து முடிவதற்குள் பொழுது விடிந்து விட்டது.
மகா வைத்தியநாதையர் அவர் தமையனார் முதலிய பலர் பாடிய 86 பாடல்கள்
இருந்தன. நான் எட்டுச் செய்யுட்களை இயற்றினேன்.

புஸ்தகப் பதிப்பு

அப்பாடல்களையெல்லாம் அச்சிட வேண்டுமென்று வேணுவனலிங்கத்
தம்பிரான் விரும்பினார். அப்படியே செய்ய ஏற்பாடு நடை பெற்றபோது
திருவாவடுதுறையில் உள்ள வேணுவனலிங்க விலாசத்தைச் சிறப்பித்த
செய்யுட்களையும் சேர்த்து வெளியிடலாமென்று பலர் கூறினர். அவ்வாறே
அவ்விரண்டு வகைப் பாடல்களும் வேறு சில பாடல்களும் சேர்த்துத்
திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக் கூடத்தில் ஒரு புஸ்தகமாகப்
பதிப்பிக்க பெற்றன. அந்தப் புஸ்தகத்தை ஒழுங்குபடுத்தி எழுதிக் கொடுத்தவன்
நானே. பிற்காலத்தில் எவ்வளவோ புஸ்தகங்களைப் பரிசோதித்து வெளியிடும்
வேலையில் ஈடுபட்ட நான் முதன் முதலாகப் பதிப்பித்தது அந்தப் பாடல்
திரட்டே. அக்காலத்தில் பதிப்பு முறை சிறிதும் எனக்குத் தெரியாது. ஆனாலும்
நான் பரிசோதித்து வெளியிட்ட முதல் புஸ்தகமென்ற நினைவினால்
அதனிடத்தில் எனக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வருகிறது. அதன் முகப்புப்
பக்கத்தில் இருந்தவை வருமாறு:

“Œ. கணபதி துணை. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை
யாதீனத்தைச் சேர்ந்த செவந்திபுரத்தில் மேற்படி ஆதீனம் பெரிய காறுபாறு
வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றுவித்த