பக்கம் எண் :

குழந்தைப் பருவம் 47

முயற்சி செய்ய வேண்டியிருக்கையில் பழங்கடனைத் தீர்ப்பதற்கு
மார்க்கம் ஏது? என்று அவர் எண்ணி எண்ணிக் கலக்க முற்றார். ஸமஸ்தான
சங்கீத வித்துவானாக இருந்ததில் அவருக்குப் பெருமையும் பல
அன்பர்களுடைய பழக்கமும் உண்டாயின. ஸமஸ்தான நிலத்திலிருந்து கிடைத்த
வருஷ வருவாய் ரூபாய் ஐம்பது; ஊரிலுள்ள மூன்று மா நிலத்திலிருந்து வந்த
வரும்படி அதிகமன்று. இந்த நிலையில் நண்பர்களிடமிருந்து காரணமின்றிப்
பொருளுதவி பெறுவதையும் அவர் விரும்பவில்லை. அதனால் இராமாயண
கீர்த்தனங்களை இசையுடன் முறையாகச் சில நாட்கள் படித்துப் பொருள்
சொல்லிப் பட்டாபிஷேகம் செய்து முடிக்கும் ஒரு முயற்சியைத் தொடங்கினார்.
அம்முயற்சியினால் நல்ல பயன் உண்டாயிற்று. சில இடங்களில் உள்ளவர்கள்
அவரைத் தங்கள் தங்கள் ஊருக்கு வருவித்து இராமாயண கீர்த்தனம் கேட்கத்
தொடங்கினர்.

ஒவ்வொரு முறையும் இராமாயணம் நிறைவேறியவுடன் அன்பர்கள் ஒரு
தொகை தொகுத்து அளிப்பார்கள். அந்தத் தொகை குடும்பத்துக்கு மிகவும்
உபயோகமாக இருக்கும், இவ்வாறு தொடங்கிய இராமாயண முயற்சியே
என்னுடைய தந்தையாரின் உள்ளக் கவலையைத் தீர்ப்பதற்கு உதவியாயிற்று.

அரியிலூருக்கு கிழக்கே மணலேரி என்னும் ஊரொன்று உண்டு. அங்கே
மணிகட்டி உடையார் என்ற செல்வர் ஒருவர் இருந்தார். அவர் என்
தந்தையாரிடம் அன்புடையவர்; அடிக்கடி தம் ஊருக்கு வருவித்து அவர்
பாட்டைக் கேட்டு இராமாயணப் பிரசங்கமும் நடைபெறச் செய்து பொருளுதவி
செய்து வந்தார். ஒரு சமயம் குடும்பக் கடனைத் தாமே தீர்த்து விடுவதாகவும்
சொன்னார். அது கேட்ட என் தகப்பனாரது கவலை குறைந்தது. எவ்வாறேனும்
கடன் சுமையைப் போக்கி விடலாமென்ற நம்பிக்கை உதயமாயிற்று.

மணிகட்டி உடையாரைப் போன்ற பல வேளாளச் செல்வர்களுடைய
ஆதரவு அக்காலத்தில் என் பிதாவுக்குக் கிடைத்தது. என் ஆண்டு நிறைவு
அரியிலூரிலே மிகவும் சிறப்பாக நடந்தது. முற்கூறிய செல்வர்கள் செய்த
உதவிகளே அச்சிறப்புக்குக் காரணம்.

அக்காலத்தில் என் தந்தையாரை ஆதரித்தவர்கள் அல்லிநகரம்
சோமசுந்தரம் பிள்ளை, சுந்தர சபாபதி பிள்ளை, கொத்தவாசல் குமர பிள்ளை,
சிவசிதம்பரம் பிள்ளை, இராமகிருஷ்ண பிள்ளை, இராமசாமி
-----------------------------------------------------------------------------

இவர் தஞ்சையில் வக்கீலாக இருந்தவரும் தமிழறிஞரும் என்
அன்பருமாகிய ராவ்பகதூர் ஸ்ரீ கே, எஸ். ஸ்ரீநிவாச பிள்ளையின் தந்தையார்.