பக்கம் எண் :

விளையாட்டும் விந்தையும் 61

அவரிடத்தில் பக்தி உண்டாயிற்று. அவர் பூஜையை முடித்துக் கொண்டு
பகல் இரண்டு மணிக்கு உண்பார்; அப்போது அவரோடு நானும் உண்பேன்.
அவ்வாறு உண்ணும்போது எனக்கு ஒருவித இன்பம் உண்டாகும்; உடம்பில்
ஒரு புதிய வேறுபாடு தோற்றும். தெய்வப் பிரஸாதத்தை உண்ணுகிறோமென்ற
நினைவே அதற்குக் காரணம். அவருடைய தூய்மை என் உள்ளத்தைக் குளிரச்
செய்தது.

விடியற் காலத்திலும் பிற்பகலிலும் இரவிலும் அவர் செய்து வந்த
சிவநாம ஸ்மரணை என் காதில் விழும்; அது மெல்ல மெல்ல என்
உள்ளத்திலும் இடங்கொண்டது. நானும் அதில் ஈடுபட்டு ஓய்ந்த நேரங்களில்
சிவ நாமத்தைச் சொல்லி வரலானேன்.

ஒரு நாள் நான் சிவ நாமம் சொல்லிக்கொண்டிருந்தபோது என்
மாதாமகராகிய கிருஷ்ண சாஸ்திரிகள் அதனை அறிந்து வியந்தார். அப்போது
என்னிடத்தில் அவருக்குக் கருணை பிறந்தது. உடனே மிருத்தியுஞ்சய
ஸ்தோத்திர சுலோகங்கள் பதினாறையும் எனக்கு உபதேசித்தார்;
மார்க்கண்டேயர் அந்த மந்திரத்தால் சிரஞ்சீவியாக வாழலானாரென்ற புராண
வரலாற்றையும் கூறி, “அப்பா, இந்த மந்திரங்களைத் தினந்தோறும்
சூரியாஸ்தமனத்திற்குப் பின்பு ஒவ்வொரு சுலோகமாகச் சொல்லி ஈசுவரத்
தியானம் செய்து நமஸ்காரம் செய்வாயானால் நல்ல சௌக்கியம் ஏற்படும்;
ஆயுர் விருத்தியும் உண்டாகும்” என்று கட்டளையிட்டார். அப்படியே
நாள்தோறும் செய்யத் தொடங்கினேன் சில வருஷங்களுக்கு முன்பு வரையில்
நமஸ்காரம் செய்ய முடிந்தது. சில காலமாகச் சுலோகத்தை மாத்திரம் சொல்லி
வருகிறேன்.

இங்கிலீஷ் எழுத்துக்கள்

என் இளமைக் காலத்தில் கிராமங்களுக்கு இங்கிலீஷ் படிப்பு
வரவில்லை, நகரங்களில் சில பள்ளிக்கூடங்களில் இங்கிலீஷ் கற்றுத்
தந்தார்கள். இங்கிலீஷ் தெரிந்தவர்களுக்கு அளவற்ற மதிப்பு இருந்தது. அரை
குறையாகத் தெரிந்து கொண்டவர்களுக்குக்கூட எளிதில் ஏதேனும் வேலை
கிடைக்கும்.

கிராமப் பள்ளிக்கூடங்களில் தமிழ் எண்களே வழக்கத்தில் இருந்தன.
நான் இளமையில் அவற்றையே கற்றுக் கொண்டேன்.

உத்தமதானபுரத்தில் நாங்கள் இருந்தபோது எனக்கு உபாத்தியாயராக
இருந்த சாமிநாதையர் வீட்டிற்கு அவருடைய பந்து ஒருவர் அடிக்கடி வருவார்.
அவருக்குச்
சிவஸ்வாமி ஐயரென்று