பக்கம் எண் :

அடுத்த நூல் 623

உங்களைப் போஷித்த திருவாவடுதுறை மடத்தாருக்கும், உங்களுக்கு
வேலை செய்வித்த எனக்கும், உங்களுக்கும் பெரிய கீர்த்தியைச் சம்பாதித்து
வைத்து விட்டீர்கள்.”

இவ்வாறு செட்டியார் பாராட்டிக் கொண்டே போனார். அந்த இரவு
முழுவதும் ஆனந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். காலையில்
திருச்சிராப்பள்ளியிலும் அதைச் சார்ந்த இடங்களிலும் கையொப்பமிட்ட
கனவான்களிடம் சென்று சிந்தாமணிப் பிரதிகளைச் சேர்ப்பித்து வரலாமென்று
புறப்பட்டேன். செட்டியார் என்னைத் தடுத்து, “நான் தக்கவர்களை அனுப்பி,
உரியவர்களிடம் சேர்ப்பித்து விடச் சொல்லுகிறேன். என்னுடன் இருந்து பேசிக்
கொண்டிருக்க வேண்டும்” என்று சொல்லிச் சிலரை அழைத்து அவர்கள்
மூலமாகப் பிரதிகளை உரியவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்தார்.

நான் அவருடன் இருந்து நேரம் போவதே தெரியாமல் பேசிக்
கொண்டே யிருந்தேன். சிந்தாமணியிலுள்ள சுவை மிக்க சில பகுதிகளைப்
படித்துக் காட்டினேன். சில இடங்களில் அவர் மன முருகிக் கண்ணீர்
விடுத்தார். சில சொற்களின் உருவத்தைக் கண்டுபிடிக்க நான் அடைந்த
கஷ்டத்தையும், பல காலமாகச் சந்தேகமாக விருந்த சில விஷயங்கள்
தெளிவாகிய செய்தியையும் எடுத்துச் சொன்னேன். கேட்டுக் கேட்டு
விம்மிதமடைந்தார்.

ஒரு தவறு

இப்படிக் கேட்டு வந்த அவர், கடைசியில் ஒரு விஷயத்தைச்
சொன்னார். “இதில் பல பேருடைய உதவிகளைப் பற்றி எழுதியிருக்கிறீ்ர்களே.
எந்த இடத்திலாவது என் பெயர் வந்திருக்குமென்று எதிர் பார்த்தேன். நீங்கள்
எழுதவில்லை. இந்த விஷயத்தில் உங்களிடத்தில் சிறிது வருத்தந்தான்” என்று
சொன்னார். தம் கருத்தை மறைக்காமல் வெளிப்படையாகச் சொல்லும்
இயல்புடையரல்லவா அவர்? அந்த வருத்தத்தால் அவருக்கு என்னிடமிருந்த
அன்போ, சீவகசிந்தாமணிப் பதிப்பிலுள்ள மதிப்போ குறையவில்லை. அது
வேறு விஷயம், ஒரு விஷயத்தில் குறைபாடு கண்டால் அது பற்றி எல்லா
விஷயங்களையும் குறைபாடுகளாகவே காண்பதும், ஒன்றிற் சிறப்புக் கண்டால்
மற்றவற்றிலுள்ள குறைகளைக் காணாமற் போவதும் அவர்பால் இல்லை.
குணமும் குற்றமும் தனித் தனியாக அவர் கண்களுக்குப்படும். அவற்றை
வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லி விடுவார்.

அவர் பெயரை எழுதாமைக்கு ஒரு சிறிய காரணம் உண்டு. ஆனால்
அது பற்றி எழுதாமல் விட்டது பிழைதானென்பதை என்