பக்கம் எண் :

66என் சரித்திரம்

அதில் முன்பு படைத்தலைவர் வசித்திருந்தார். அதனால் தான்
அப்பெயர் வந்தது. ஸ்தானாதிபதி குமாரசாமி பிள்ளை என்பவரது வீடொன்று
உள்ளது. இவை இவ்வூரின் பழம் பெருமையைக் காட்டும் அடையாளங்கள்.

குளங்களும் கோயில்களும்

இவ்வூரில் செட்டி குளம் குறிஞ்சான்குளம் என இரண்டு பெரிய
குளங்கள் உள்ளன. குறிஞ்சான் குளக்கரையில் அரசு நட்ட பிள்ளையார்
கோயில் என்ற ஆலயம் இருக்கிறது. அந்தப் பிள்ளையார் சம்பந்தமாகவும் ஒரு
கதை உண்டு: ஒரு ஜமீன்தார் தம்முடைய பகையரசருக்குப் பயந்திருந்தாராம்.
அப்பால் ஒருவாறு தைரியமடைந்து பகைவர்களை எதிர்க்கச் சென்றார்.
செல்லும்போது அந்த விநாயகரை வேண்டிக்கொண்டு சென்றாராம்.
பகைவர்களுடன் நடத்திய போரில் அவர் வென்றார். விநாயகருடைய
திருவருள்தான் தமக்குப் பலமாக இருந்ததென்று நம்பினார். அந்தப்
பிள்ளையாருக்குக் கோயில் அமைத்துப் பூஜை செய்வித்தார். அவரது அரசைப்
பகைவர்கையில் சிக்காதபடி பாதுகாத்து நிலைநாட்டியமையால் விநாயகருக்கு
அரசு நட்ட பிள்ளையார் என்ற திருநாமம் வழங்கலாயிற்று. அந்த ஜமீன்தார்
பிறகு அரசு நட்டான் ஏரி என்பதையும் அருகில் வெட்டுவித்தார்.

குறிஞ்சான் குளத்துத் தென் கரையில் மீனாட்சி மண்டபமென்ற
இடத்தில் விநாயகர் கோயிலும் சிவ விஷ்ணு ஆலயங்களும் உள்ளன.
அம்மண்டபம் முதலியன இந்த ஸமஸ்தானத்தில் அதிகாரியாக விளங்கிய ஸ்ரீ
மீனாட்சி தீக்ஷிதரென்பவராற் கட்டப்பட்டவை. அங்குள்ள மூர்த்திகளுக்கு உரிய
பூஜைகள் நன்றாக நடைபெற்று வந்தன.

இங்குள்ள விஷ்ணு கோயில் பெரியது. பெருமாளுக்கு வேங்கடேசப்
பெருமாளென்பது திருநாமம். கோயிலின் மகா மண்டபத்தில் மகா விஷ்ணுவின்
பத்து அவதாரங்களின் திருவுருவங்களும் தூண்களில்
அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அம்மண்டபத்திற்குத் தசாவதார
மண்டபமென்ற பெயர் வழங்குகின்றது. அங்கே மூர்த்திகளெல்லாம் மிக
அழகாக அமைந்திருக்கின்றன.

இங்கே ஒரு சிவாலயமும் இருக்கிறது. சிவபெருமானுக்கு ஆலந்துறை
ஈசரென்றும் அம்பிகைக்கு அருந்தவநாயகி யென்றும் திருநாமங்கள்
வழங்குகின்றன. ஜமீன்தார்கள் குலதெய்வமாகிய ஒப்பிலாதவளென்னும்
துர்க்கையின் கோயிலும், காமாக்ஷியம்மன்