பக்கம் எண் :

666என் சரித்திரம்

வழங்குகிற பழைய நூல் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து வெளியிட மிக்க
விருப்பமுடையனேனும் சீவகசிந்தாமணி அச்சிட்டுநிறைவேறிய காலமுதல்
கொழும்பு நகரத்துப் பிரபு சிகாமணியும், செந்தமிழ்ப் பாஷாபிமானியுமாகிய ம-¥

-¥-ஸ்ரீ பொ. குமாரசுவாமி முதலியாரவர்கள், ஐந்து காப்பியங்களுள்
இரண்டாவதாகிய சிலப்பதிகாரத்தை அடியார்க்கு நல்லாருரையுடன் பதிப்பித்துப்
பிரகடனம் செய்ய வேண்டுமென்றும். அந்தச் செலவைத் தாம் கொடுப்பதாகவும்
அடிக்கடி அன்போடு எழுதியனுப்புதலால், முந்தி அந்நூலை அவ்வுரையுடன்
பதிப்பிக்க நிச்சயித்திருக்கிறேன்’ என்று புலப்படுத்தினேன்.

சிந்தாமணி, பத்துப்பாட்டு என்னும் நூல்களின் உரையினால்
நச்சினார்க்கினியரது பரந்த நூற் பயிற்சி எனக்குத் தெரிய வந்தது. அவருடைய
உரை இல்லாவிடின் பல அரிய செய்திகள் புலப்பட வழியே இல்லை.
கலித்தொகை உரையும், தொல்காப்பிய உரைகளும் அவ்வுரையாசிரியரின்
பெருமையைப் பின்னும் நன்றாக விளக்கின.

நூலின்பெருமையை யாவரும் உணரும்படி செய்யும் உபகாரிகள்
உரையாசிரியர்கள். நச்சினார்க்கினியர் உரையினால் அவருக்குப் பழைய
நூலாசிரியர்களிடத்தும் நூல்களிடத்தும் உள்ள பேரன்பும் பிற்காலத்தார்
செய்யும் மாற்றங்களில் உள்ள வெறுப்பும் தெரிய வந்தன. தமிழ் வளர்த்த
மகோபகாரிகளில் அவர் ஒருவரென்பதே என் கருத்து. பத்துப்பாட்டுப்
பதிப்பில் அவர் வரலாற்றைத் தனியே எழுதவில்லை. ஆயினும் அவர் மீது
ஒரு துதி கவி பாடி முகவுரையின் ஈற்றில் அதை்தேன். அது வருமாறு:-

“எவனால வாயினிடை யமுதவா புடையனென
இயம்பப் பெற்றோன்
எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுரை
எழுதி யீந்தோன்
எவன்பரம வுபகாரியெவனச்சி னார்க்கினியன்
எனும்பே ராளன்
அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென
தகத்து மன்னோ”

ஒருவாறு இறைவன் திருவருளால் நிறைவேறிய பத்துப் பாட்டோ தமிழ்
நாட்டினருடைய பாராட்டைப் பெற்றது. பல அரிய சரித்திரச் செய்திகளும்
பண்டைக்காலத் தமிழ் மக்களின்