வத்தினாலும் அறிந்திருந்த எனக்கு அவற்றை அமைத்துக் கீர்த்தனங்கள் இயற்றும் சந்தர்ப்பம் அப்போது வாய்த்தது. சுருட்டி, சகானா, செஞ்சுருட்டி, துஜாவந்தி என்னும் ராகங்களில் கீர்த்தனங்களை இயற்றினேன். துஜாவந்தியில் அமைந்த கீர்த்தனத்தில் ஒரு பகுதி வருமாறு:- பல்லவி உனைமற வாத ஒருவரம்அடியேனுக் குவந்தருள் புரிந்திடு வாயே அநுபல்லவி நனைமலர்ப் பொழிற்செந்தில் நகரி லெழுந்தருளி நம்பு மடியவர்க் கின்ப மருள்புரி நாத பரசுக போத வனுதினம் (உனை) சரணம் 1. உலவும் பசுமயிலு முனது திருவுருவும் ஒழிவின்றி நினைப்பதெந் நாளோ-துன்பம் பலவும் புரியுமைந்து புலனுக்கு யான்றொண்டு பண்ணிச் செலுமடிமை யாளோ-வளம் குலவும் பரங்கிரித் தேனே-சுர குலங்களைக் காத்தருள் வோனே-எங்கும் நிலவும் பரம்பொருள் நீயென் றறிந்ததொண்டர் நிறைந்த பழனியில் உறைந்த குருபர நீப மணிந்தப்ர தாப சுரவர (உனை) கீர்த்தனங்களை எல்லாம் என் தகப்பனாரிடம் படித்துக் காட்டி அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றேன். குமாரசாமி செட்டியார், செய்யுட்களையும், கீர்த்தனங்களையும் பெற்று மிக்க ஆனந்தமடைந்தார். பிறகு அவை 1891-ஆம் வருஷத்தில் கும்பகோணத்திலேயே என்னால் அச்சிடப்பட்டன. மதிப்புரைகள் பத்துப்பாட்டைப்பெற்ற பாலைக்காட்டு முனிஸிபல் சேர்மன் ராவ்பகதூர் பா. ஐ. சின்னசாமி பிள்ளை அந் நூலைப்பற்றி மிக விரிவாக, ‘ஹிஸ்டாரிக்ஸ்’ என்னும் புனைபெயரோடு சென்னை ‘ஹிந்து’ பத்திரிகையில் ஒரு மதிப்புரை எழுதினார். அது 13-3-1890 ல் வெளி வந்தது. திருவனந்தபுரம் புரொபஸர் பி. சுந்தரம் பிள்ளை |