பக்கம் எண் :

பயனற்ற பிரயாணம் 673

வரகனேரி

அப்பால் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த வரகனேரியில் பிள்ளை
யவர்களுடைய மாணாக்கராகிய சவரிமுத்தாபிள்ளை யென்னும் கனவானது
வீட்டுக்குப் போனேன். கிறிஸ்தவராக இருந்தாலும் அவர் பல சைவப்
பிரபந்தங்களையும் புராணங்களையும் சாஸ்திரங்களையும் பிள்ளையவர்கள்
இயற்றிய நூல்களையும் சேகரித்து வைத்திருந்தார். அவற்றில் எனக்கு
வேண்டிய சிலவற்றைப் பெற்றுக் கொண்டேன். நேஷனல் ஹைஸ்கூலில் தமிழ்ப்
பண்டிதராக இருந்த ஆறுமுக நயினாரென்பவரிடம் சில ஏடுகள் இருந்தன.
அவற்றைப் பார்த்தேன். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிற் சிலவற்றைக்
கண்டேன். இன்னும் சில இடங்களையும் பார்த்தேன். ஓரிடத்திலும்
சிலப்பதிகாரப் பிரதி கிடைக்கவே இல்லை. திரிசிரபுரத்துக்கருகேயுள்ள ஒரு
பேட்டையில் இருந்த வித்துவான் சுப்பிரமணிய ஐயரிடமிருந்த சில
அருமையான பிரபந்தங்கள் முதலியவை கிடைத்தன.

திருச்சிராப்பள்ளியிலிருந்து குழித்தலை சென்று அதன் அருகிலுள்ள
ஊர்களில் ஏடுகளைத் தேடினேன். எனக்கு உதவியாக ஒன்றும்
கிடைக்கவில்லை. அப்படியே சேலத்தை அடைந்தேன்.

சேலம்

சேலம் இராமசுவாமி முதலியாருடைய உதவியால் என் முயற்சி எளிதில்
நிறைவேறுமென்று மகிழ்ந்தேன். சொக்கப்ப நாவலருடைய பரம்பரையினர் யார்
இருக்கிறார்களென்று விசாரித்தபோது சபாபதி முதலியாரென்று ஒருவர்
இருந்தது தெரிந்தது. அவர் வீடு தேடிச் சென்றேன். நான் எதிர்பார்த்தபடியே
அங்கே பல பழைய ஏட்டுப் பிரதிகள் இருந்தன. மிக்க வேகத்தோடு
அவற்றைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். பெரும்பாலான ஏட்டுச் சுவடிகள்
பழுது பட்டும், குறைந்தும், ஒடிந்தும், இடையிடையே முறிந்தும், மிகவும்
சிதிலமுற்றும் காணப்பட்டன. அவற்றில் எனக்கு வேண்டியதாக ஒன்றும்
கிடைக்கவில்லை. கம்ப ராமாயணம் ஏழு காண்டமும் தனித் தனியே உள்ள
ஏழு பிரதிகள் கிடைத்தன. சேலத்தைச் சார்ந்த சூரமங்கலத்தில் ஆறுமுகம்
பிள்ளை என்ற சித்த வைத்தியர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில்
கணக்கில்லாத ஏட்டுச் சுவடிகள் உள்ளன என்று கேள்வியுற்று அங்கே போய்ப்
பார்த்தேன். ஆறுமுகம் பிள்ளை சுறுசுறுப்பாக இருந்தார். முகத்தில் நல்ல
தெளிவு இருந்தது. “உங்கள் பிராயம் என்ன?” என்று நான் கேட்டேன். 97
என்றார். நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன். அதிகமாகப் போனால் அறுபது
பிராயம் இருக்கலாமென்றுதான் மதிப்பிடும்படி இருந்தது அவர்