பக்கம் எண் :

10சத்திய சோதனை

Untitled Document

முயன்றாலும், அற்பாயுசில்           முடிந்துவிடக் கூடியதே’ என்று
நிஷ்குலானந்தர் பாடியிருக்கிறார்.இப்பாடலை நான் பாடும்போதெல்லாம்,
பாடக் கேட்கும்      போதெல்லாம், வெறுக்கத்தக்க கசப்பான அந்தச்
சம்பவம் உடனே என் நினைவுக்கு வந்து, வெட்கப்படும்படி செய்கிறது.

     என் தந்தைக்குப்    பலமான   காயங்கள்     ஏற்பட்டிருந்தும்,
சமாளித்துக்கொண்டு       தைரியமாகவே       காணப்பட்டார்.மண
வைபவங்களிலும் கலந்து கொண்டார். பல     தரப்பட்ட சடங்குகளில்
அவர் கலந்து   கொண்டபோது, எந்த எந்த            இடங்களில்
உட்கார்ந்திருந்தார்  என்பதைக்கூட   இன்றும்  என் மனக்கண் முன்பு
கொண்டுவர முடியும். நான்   குழந்தையாக    இருந்தபோதே எனக்கு
விவாகம் செய்துவிட்டதற்காக என்றாவது        ஒரு நாள் நான் என்
தந்தையைக் கடுமையாகக் குறை கூறுவேன் என்று  அப்பொழுது நான்
கனவிலும் எண்ணவில்லை. அன்று  நடைபெற்றவையாவும் சரியானவை,
நியாயமானவை, மகிழ்ச்சிகரமானவை  என்றே அந்த நாளில் எனக்குத்
தோன்றியது.விவாகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்ற   ஆர்வம்
எனக்கே  இருந்தது. என்    தந்தை செய்வன எல்லாம்     சரியான
காரியமாகவே அப்பொழுது     எனக்குத்  தோன்றியதால் அவற்றைப்
பற்றிய நினைவு    என் ஞாபகத்தில் அப்படியே இருந்து வருகின்றது.
மணவறையில்       நாங்கள் எவ்விதம் அமர்ந்திருந்தோம், சப்தபதிச்
சடங்குகளை எவ்விதம்     நிறைவேற்றினோம், புதிதாக    மணமான
கணவனும்    மனைவியும்    இனிப்புக்    கன்ஸாரை    எவ்விதம்
ஒருவருக்கொருவர் வாயில் ஊட்டிக்கொண்டோம், நாங்கள்  இருவரும்
எவ்விதம் கூடி வாழத் தலைப்பட்டோம்     என்பனவற்றையெல்லாம்
இன்றுங்கூட என் உள்ளத்தில் நினைத்துப்   பார்க்க முடியும். மேலும்
அந்த    முதல் இரவு ! எதுவுமே அறியாத இரு குழந்தைகள். எந்தச்
சிந்தனையும் இல்லாமல்     வாழ்க்கைச் சாகரத்தில் தாமே குதித்தன.
முதல் இரவில் நான் எப்படியெல்லாம் நடந்து    கொள்ள வேண்டும்
என்பதைப் பற்றி என்     அண்ணன் மனைவி      எனக்கு முழுப்
போதனையும் செய்து      வைத்திருந்தார். என் மனைவியைத் தயார்
செய்திருந்தவர் யார் என்று      எனக்குத் தெரியாது. அதைப் பற்றி
அவளை நான் கேட்டதே இல்லை; இப்பொழுது கேட்கும் உத்தேசமும்
இல்லை. ஒருவரையொருவர்          சந்திப்பதில் எங்களுக்கு ஒரே
நடுக்கந்தான். இதனைப்பற்றி           வாசகர்களுக்குச் சந்தேகமே
தேவையில்லை. உண்மையிலேயே எங்களுக்கு அளவு கடந்த கூச்சம்.
அவளுடன் நான் எப்படிப் பேசுவது? என்ன சொல்லுவது? சொல்லிக்
கொடுத்திருந்த பாடம் அந்த அளவுக்கு உதவவில்லை.     ஆனால்,
இத்தகைய காரியங்களில் உண்மையில் எந்தவிதமான போதனையுமே
அவசியமில்லை. ஜன்மாந்தர வாசனைகளே,