பக்கம் எண் :

108சத்திய சோதனை

Untitled Document
தோன்றவும் இல்லை.     அவர்களில் சிலர்   என்னை வெறுத்தனர்.
ஆனாலும், அவர்கள் மனம் புண்படும் காரியம்     எதையும் செய்து
விடக்கூடாது என்பதில்   எச்சரிக்கையுடன்      நடந்துகொண்டேன்.
சாதிக்கட்டுப்பாடு சம்பந்தமான    விதி முறைகளையெல்லாம் மதித்து
நடந்துகொண்டேன்.     அந்தக் கட்டுப்பாடுகளின்படி என் மாமனார்,
மாமியார்,      தமக்கை, மைத்துனர் உட்பட என் உறவினர் யாருமே
எனக்குச் சாப்பாடு போடக் கூடாது. ஆகையால்,   அவர்களில் யார்
வீட்டிலும் நான்           தண்ணீர் குடிப்பதுகூட இல்லை.  இந்தக்
கட்டுப்பாட்டை   ரகசியமாக மீறிவிட அவர்கள் தயாராக இருந்தனர்.
பகிரங்கமாகச் செய்யாததை ரகசியமாகச் செய்வது     என்பது என்
இயல்புக்கே நேர் விரோதமானது.

     இவ்விதம் என்மீது குறை     கூறுவதற்கே கொஞ்சமும் இடம்
வைக்காமல் நான் நடந்து   கொண்டதன் பலனாக,  எனக்குச் சாதித்
தொல்லை ஏற்படுவதற்கே     சந்தர்ப்பம் இல்லாது போயிற்று. அது
மாத்திரம் அல்ல.    என்னைச்     சாதியிலிருந்து        ஒதுக்கி
வைக்கப்பட்டவனாக       இன்னும் கருதிக் கொண்டிருந்தவர்களில்
பெரும்பாலோர்     என்னிடம் அன்போடும் தாராளமாகவும் நடந்து
கொண்டார்கள்.சாதிக்காக நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று
எதிர்பாராமலேயே என்   தொழிலிலும் அவர்கள்   எனக்கு உதவி
செய்தார்கள்.    இந்த      நல்ல காரியங்களெல்லாம் என்னுடைய
எதிர்ப்பின்மையின் பலனே என்பது எனது திடநம்பிக்கை.  சாதியில்
என்னைச்   சேர்த்துக்கொண்டாக வேண்டும் என்று நான் கிளர்ச்சி
செய்திருந்தால்,  சாதியை   இன்னும் பல கட்சிகளாகப் பிரித்துவிட
நான்     முயன்றிருந்தால்,   சாதியாருக்கு     நான் ஆத்திரத்தை
மூட்டியிருப்பின் அவர்களும் நிச்சயம் எதிர்த்துப் பதிலுக்குப்  பதில்
செய்திருப்பார்கள்.   இங்கிலாந்திலிருந்து     நான்   திரும்பியதும்
புயலிலிருந்து ஒதுங்கிவிடுவதற்குப் பதிலாக,நான் கிளர்ச்சிச்  சுழலில்
சிக்குண்டு, பொய் நடிப்பை மேற்கொள்ளுவதற்கு  உடந்தையாகவும்
இருந்திருப்பேன்.

     என் மனைவியுடன் எனக்கு இருந்த உறவு,   இன்னும் நான்
விரும்பிய வகையில் அமையவில்லை.   எனக்கு இருந்த சந்தேகக்
குணத்தை என் இங்கிலாந்து வாசமும்  போக்கக் காணோம்.சின்ன
விஷயத்திற்கெல்லாம் கூட,   என் மனைவி மீது      முன்போல்
சந்தேகப்பட்டு எரிந்து விழுந்து கொண்டிருந்தேன்.   ஆகையால்,
நான் கொண்டிருந்த ஆசைகளெல்லாம் நிறைவேறாமலே இருந்தன.
என் மனைவி எழுதப் படிக்கக்     கற்றுக்கொண்டாக வேண்டும்
என்று முடிவு செய்து கொண்டேன். அவளுடைய படிப்புக்கு நான்
உதவி செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தேன். ஆனால், இதில்
என் காமம் வந்து குறுக்கிட்டது. என்னுடைய குறைபாடுகளுக்காக
அவள் கஷ்டப்பட      வேண்டியதாயிற்று. ஒரு சமயம் அவளை