பக்கம் எண் :

வாழ்க்கையைத் தொடங்கிய விதம்109

Untitled Document
அவளுடைய தந்தையார்  வீட்டிற்கு அனுப்பிவிடும் அளவுக்குக்கூடப்
போய்விட்டேன்.  அவளைக் கொடிய மனத் துயரத்திற்கு ஆளாக்கிய
பிறகே, திரும்ப  அழைத்துக்கொள்ளச் சம்மதித்தேன். இவையெல்லாம்
என்னுடைய பெருந்தவறுகள்     என்பதைப் பின்னால் உணர்ந்தேன்.

     குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் விஷயத்தில்  சீர்திருத்தம்
செய்ய      வேண்டும் என்று      திட்டம் போட்டிருந்தேன்.  என்
அண்ணனுக்குக் குழந்தைகள் உண்டு.நான் இங்கிலாந்து சென்ற போது,
வீட்டில் விட்டுச் சென்ற       என் பையனுக்கும் இப்பொழுது சுமார்
நான்கு வயது.   அச்சிறு     குழந்தைகளுக்குத்     தேகாப்பியாசம்
சொல்லிக்கொடுத்து,   அவர்கள் உடல் வலுப்பெறச் செய்ய வேண்டும்
என்பது என் ஆவல்.   என்னுடைய       நேரான மேற்பார்வையில்
அக்குழந்தைகளை வளர்க்கவேண்டும்  என்றும் நினைத்தேன்.  இதில்
என் சகோதரரின் ஆதரவும் எனக்கு இருந்ததால்    என் முயற்சியில்
அநேகமாக வெற்றியும் பெற்றேன். குழந்தைகளுடன்   கூடியிருப்பதில்
எனக்கு அதிகப் பிரியம். அவர்களுடன் விளையாடி,      வேடிக்கை
செய்து      கொண்டிருக்கும் வழக்கம்,    இன்றைக்கும்  என்னிடம்
அப்படியே     இருந்து வருகிறது.   குழந்தைகளுக்கு   நான் நல்ல
உபாத்தியாயராக இருப்பேன் என்ற எண்ணம்     அப்பொழுது முதல்
எனக்கு இருந்து வருகிறது.

     உணவுச்   சீர்திருத்தம்    அவசியமானது    என்பது தெளிவு.
ஏற்கனவே வீட்டில்        தேநீரும் காப்பியும் புகுந்துவிட்டன. நான்
இங்கிலாந்திலிருந்து திரும்பியதும்,  ஒருவிதமான ஆங்கிலச் சூழ்நிலை
வீட்டில் இருக்கும்படி         செய்வதே சரி என்று என் சகோதரர்
நினைத்துவிட்டார். அதனால்,  எப்பொழுதுதோ விஷேட சமயங்களில்
மட்டும் உபயோகிப்பதற்கென்று  வைத்திருந்த   பீங்கான் சாமான்கள்
முதலியன தினசரி உபயோகத்திற்கே  வந்துவிட்டன.    என்னுடைய
‘சீர்திருத்தங்கள்’ அதை  பூர்த்தி செய்தன.  தேநீருக்கும் காப்பிக்கும்
பதிலாக,  ஓட்ஸ் கஞ்சியையும்      கோக்கோவையும் புகுத்தினேன்.
உண்மையில் தேநீருடனும் காப்பியுடனும் இவை   அதிகப்படியாகவே
சேர்ந்துவிட்டன. ஐரோப்பிய       உடையையும் புகுத்தி, ஐரோப்பிய
மயமாக்குவதைப் பூர்த்தி செய்தேன்.

     இவ்வாறு     செலவுகள்     அதிகமாகிக்கொண்டே போயின
ஒவ்வொரு நாளும்        புதிய சாமான்கள் சேர்க்கப்பட்டு வந்தன
யானையைக் கட்டித் தீனிபோடும் கதை       ஆகிவிட்டது. இந்தச்
செலவுகளுக்கெல்லாம் வேண்டிய பணத்திற்கு    எங்கே   போவது?
ராஜ்கோட்டில் நான் பாரிஸ்டர் தொழிலை      ஆரம்பிப்பதென்றால்
அது கேலிக்கு இடமானதாகும். தகுதி பெற்ற      ஒரு வக்கீலுக்குத்
தெரிந்தது கூட   எனக்குத் தெரியாது.      என்றாலும், அவருக்குக்
கொடுப்பதை விட    எனக்குப் பத்துமடங்கு அதிகக்     கட்டணம்
கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்!      அப்படி என்னை