பக்கம் எண் :

110சத்திய சோதனை

Untitled Document
வக்கீலாக வைத்துக் கொள்ள, எந்தக் கட்சிகாரரும்  முட்டாள் அல்ல.
அப்படிப்பட்ட ஒருவர்        கிடைத்துவிடுகிறார் என்றே வைத்துக்
கொண்டாலும்      என்னுடைய அறியாமையுடன் அகம்பாவத்தையும்
மோசடியையும் புதிதாகச்   சேர்த்து உலகிற்கு    நான் பட்டிருக்கும்
கடனை இன்னும் அதிகமாக்கிக்கொள்ளுவதா?

     ஹைகோர்ட்டு      அனுபவத்ைதைப் பெறுவதற்கும், இந்தியச்
சட்டத்தைப் படித்துக் கொள்ளுவதற்கும்,  முடிந்தவரையில் வழக்குள்
கிடைக்கும் படி செய்துகொள்ளுவதற்கும்     நான் பம்பாய் போவது
நல்லது என்று நண்பர்கள் யோசனை கூறினர்.  இந்த யோசனையை
ஏற்றுக்கொண்ட, அப்படியே பம்பாய்க்கு போனேன்.

     பம்பாயில் என்னைப் போன்றே        தகுதியற்றவரான ஒரு
சமையற்காரரை வைத்துக்கொண்டு, குடித்தனத்தை  ஆரம்பித்தேன்.
அவர் ஒரு பிராமணர்.   அவரை      வேலைக்காரராகப் பாவித்து
நடத்தாமல்,   குடும்பத்தைச் சேர்ந்த    ஒருவராகவே நடத்தினேன்.
அவர், மேலே தண்ணீரை ஊற்றிக்கொள்ளுவாரேயன்றித் தேய்த்துக்
குளிக்கமாட்டார்.    அவருடைய வேட்டி ஒரே அழுக்காயிருக்கும் ;
பூணூலும் அப்படித்தான்.      சாத்திரங்களைப் பற்றியே அவருக்கு
ஒன்றுமே தெரியாது.    அவரை விட நல்ல சமையற்காரர் எனக்குக்
கிடைப்பது எப்படி?   ரவிசங்கர் என்பது அவர் பெயர். “ரவிசங்கர்,
உமக்குச் சமையல்    தெரியாமல் இருக்கலாம்.  ஆனால், உமக்குச்
சந்தியா வந்தன மந்திரம் முதலியன தெரிந்தே இருக்கவேண்டுமே?”
என்று கேட்டேன்.

     அதற்கு அவர், “சந்தியாவந்தன மந்திரமா, ஐயா கலப்பையே
எங்கள்     சந்தியாவந்தனம் ;  மண்வெட்டியே எங்கள் அன்றாட
அனுஷ்டானம்.   அந்த வகையைச்     சேர்ந்த பிராமணன் நான்.
உங்கள்     கிருபையைக்     கொண்டு நான் வாழவேண்டியவன்.
இல்லாவிட்டால்      எனக்கு விவசாயம் இருக்கவே  இருக்கிறது”
என்றார்.

     ஆகவே,     ரவிசங்கருக்கும்   நான்   ஆசானாக இருக்க
வேண்டியதாயிற்று.     எனக்கோ வேண்டிய அவகாசம் இருந்தது.
சமையல் வேலையில் பாதியை     நானே செய்ய ஆரம்பித்தேன்.
கறிகாய்ச் சமையலில்    ஆங்கிலப்       பரிசோதனையெல்லாம்
புகுத்தினேன். ஓர் எண்ணெய் அடுப்பு வாங்கினேன்.ரவிசங்கருடன்
அடுப்பாங்கரை   வேலைகளைக்     கவனிக்கத் தலைப்பட்டேன்.
பிறருடன்     ஒரே பந்தியில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதில்
எனக்கு ஆட்சேபம் இல்லை.    ரவிசங்கருக்கும் அது கிடையாது.
ஆகவே,    இருவரும் சேர்ந்து,    சுகமாகவே வாழ்க்கை நடத்தி
வந்தோம். ஆனால்,        ஒன்றே ஒன்றுதான் குறுக்கே நின்றது.
அதாவது, அழுக்காகவே இருப்பது,   உணவையும் சுத்தமில்லாமல்
வைப்பது என்று ரவிசங்கர் விரதம் கொண்டிருந்தார்.

     செலவு      அதிகரித்துக்கொண்டே    போயிற்று. அதைச்