பக்கம் எண் :

நேட்டால் சேர்தேன்123

Untitled Document
சந்திப்போம்” என்று கூறிவிட்டுப் பம்பாய் செல்ல ராஜ்கோட்டிலிருந்து
புறப்பட்டேன்.

     தாதா அப்துல்லா கம்பெனியின் காரியஸ்தர் மூலமாகவே கப்பல்
டிக்கெட் கிடைக்கவேண்டியிருந்தது. ஆனால், கப்பலிலோ இடமில்லை.
அப்பொழுது நான்      கப்பல் ஏறவில்லையென்றால் பம்பாயிலேயே
தங்கிவிட      வேண்டிவரும்.    “கப்பலில் முதல் வகுப்பில்  இடம்
பெறுவதற்காக எங்களால் அன       முயற்சிகளையெல்லாம் செய்து
பார்த்துவிட்டோம்.   பயனில்லை.  மூன்றாம் வகுப்பில் போக நீங்கள்
தயாராக இருந்தாலன்றி வேறு வழியில்லை.    உங்கள் சாப்பாட்டுக்கு
வேண்டுமானால் முதல் வகுப்பில் ஏற்பாடு செய்து விடலாம்” என்றார்,
அக்காரியஸ்தர். நான் முதல்  வகுப்பிலேயே பிரயாணம்  செய்துவந்த
காலம் அது.    ஒரு பாரிஸ்டர்,    மூன்றாம் வகுப்பில்    எவ்விதம்
பிரயாணம் செய்ய முடியும்? ஆகவே,   அவர் கூறிய  யோசனையை
ஏற்றுக்கொள்ள          மறுத்துவிட்டேன்.   முதல் வகுப்பில் இடம்
கிடைக்கவில்லை     என்பதை நான் நம்பவில்லை.    காரியஸ்தரின்
நேர்மையில்     சந்தேகம் கொண்டேன்.  அவருடைய  சம்மதத்தின்
பேரில் கப்பலில் இடம் தேடிக்கொள்ளுவதற்கு நானே  கிளம்பினேன்.
அக் கப்பலுக்கே போனேன். அதன் பிரதம  அதிகாரியையும்  கண்டு
பேசினேன். அவர் உள்ளதைச்       சொல்லிவிட்டார்.  “வழக்கமாக
எங்கள் கப்பலில் இப்படி இட  நெருக்கடி ஏற்படுவதில்லை. ஆனால்,
மொஸாம்பிக்         கவர்னர்    ஜெனரல் அக்கப்பலில் வருகிறார்.
ஆகையால்,     இடத்தையெல்லாம்   அமர்த்திக் கொண்டுவிட்டனர்”
என்றார்.

     “என்னையும் எப்படியாவது  உள்ளே நுழைத்துவிட உங்களால்
முடியாதா?” என்று கேட்டேன்.  அவர் உச்சியிலிருந்து உள்ளங்கால்
வரை என்னை       ஒரு முறை பார்த்துவிட்டு புன்னகை புரிந்தார்.
பிறகு,   “ஒரே         ஒரு வழிதான் இருக்கிறது. என் அறையில்
அதிகப்படியாக    ஓர் இடம் இருக்கிறது.    சாதாரணமாக அதைப்
பிரயாணிகளுக்குக்  கொடுப்பதில்லை. ஆனால், அதை உங்களுக்குக்
கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்றார்,   கப்பலின் பிரதம
அதிகாரி.      அவருக்கு நன்றி கூறிவிட்டு,     அதற்கு வேண்டிய
டிக்கெட்டைக்         காரியஸ்தரைக் கொண்டு வாங்கச் செய்தேன்.
ஆகவே, தென்னாப்பிரிக்காவில்      என்னுடைய அதிர்ஷ்டத்தைச்
சோதிப்பதென்ற            முழு உற்சாகத்துடன் 1893,   ஏப்ரலில்
புறப்பட்டேன்.

     எங்கள் கப்பல் அடைந்த   முதல் துறைமுகம்  லாமு என்பது.
சுமார் பதின்மூன்று நாட்களில்        அங்கே போய்ச் சேர்ந்தோம்.
இதற்குள் கப்பல்      காப்டனும்      நானும்   சிறந்த நண்பர்கள்
ஆகிவிட்டோம். சதுரங்கம் ஆடுவதில்   அவருக்கு அதிகப் பிரியம்.
ஆனால், அந்த ஆட்டம்          அவருக்கு புதியது. ஆகையால்,
தம்மிலும் அதிகக்      கற்றுக் குட்டியாக இருப்பவரையே தம்முடன்
விளையாடுவதற்குச் சகாவாக