பக்கம் எண் :

124சத்திய சோதனை

Untitled Document
அவர் விரும்பினார். எனவே சதுரங்கம் ஆட என்னை அழைத்தார்.
அவ்விளையாட்டைக்      குறித்து    எவ்வளவோ கேள்விப்பட்டு
இருக்கிறேன். ஆனால், நான்  விளையாடியது    மாத்திரம் இல்லை.
‘அதை விளையாடினால் அறிவுக்கு அதிகப் பயிற்சி உண்டு’  என்று
விளையாடத்    தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்.  அதில் எனக்குப்
பாடம் சொல்லிக்    கொடுக்கக் காப்டன் முன் வந்தார்.  அவருக்கு
எல்லையற்ற பொறுமை உண்டு. ஆகையால்,  நான் நல்ல மாணவன்
எனக்கண்டார்.      ஒவ்வொரு சமயமும் தோற்பவன் நானே. இது,
எனக்குச்    சொல்லிக்  கொடுக்க வேண்டும் என்பதில் அவருக்கு
இன்னும்           அதிக ஆர்வத்தை உண்டாக்கியது. சதுரங்கம்
விளையாடுவது,       எனக்கும்       பிடித்திருந்தது.  ஆனால்,
அவ்விருப்பத்தை         அக்கப்பலோடு விட்டுவிட்டேன். அந்த
ஆட்டத்தைப்பற்றி எனக்கு இருந்த ஞானம்,    காய்களை நகர்த்தி
வைப்பதற்கு மேலே போனதே இல்லை.

     லாமுவில்      கப்பல் மூன்று,   நான்கு மணிநேரம் நின்றது.
துறைமுகத்தைப்      பார்ப்பதற்காக      இறங்கினேன். காப்டனும்
இறங்கிப்போனார்.     ஆனால்,   அத்துறைமுகம் அபாயகரமானது
என்றும்,    முன்னாலேயே திரும்பி  வந்துவிட வேண்டும்  என்றும்
அவர் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தார்.

     லாமு     மிகச் சிறிய ஊர்.   துறைமுகக் காரியாலயத்திற்குச்
சென்றேன். அங்கே     இந்திய குமாஸ்தாக்கள் இருந்ததைக் கண்டு
மகிழ்ச்சியடைந்தேன்.      அவர்களுடன்            பேசினேன்.
ஆப்பிரிக்காக்காரர்களையும்     அங்கே பார்த்தேன்.   அவர்களது
வாழ்க்கை முறையை      அறிந்துகொள்ளுவதில்  எனக்கு அதிகச்
சிரத்தை உண்டாயிற்று ;    அதை அறிந்துகொள்ளவும் முயன்றேன்.
இதில் கொஞ்சம் நேரமாயிற்று.

     அக்கப்பலின் மூன்றாம் வகுப்புப்   பிரயாணிகளில் சிலருடன்
எனக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது.   தரைக்குப் போய்ச் சமைத்து,
அமைதியாகச்     சாப்பிட்டுவிட்டு     வரவேண்டும் என்பதற்காக
அவர்களும் இறங்கியிருந்தனர். அவர்கள் கப்பலுக்குத் திரும்பிவிடத்
தயாராக இருந்ததைக் கண்டதும் எல்லோரும்    ஒரே படகில் ஏறிப்
புறப்பட்டோம். துறைமுகத்தில் அலை, பலமாக இருந்தது.  படகிலோ
இருக்க வேண்டியதற்கு      அதிகமான பளு இருந்தது. அலைகள்
வேகமாக அடித்துக் கொண்டிருந்ததால், கப்பலின் ஏணிக்கு அருகில்
படகை நிறுத்துவது என்பது முடியாததாகிவிட்டது.  படகு ஏணியைத்
தொடும்; உடனே ஒரு பலமான அலை வந்து, படகை  தூரத்திற்குக்
கொண்டுபோய்விடும்.       கப்பல் புறப்படுவதற்கு,  முதல் சங்கும்
ஊதியாயிற்று. நான் அதிகச் சஞ்சலம் அடைந்துவிட்டேன்.  காப்டன்
எங்களுடைய    தவிப்பையெல்லாம், மேல்தளத்திலிருந்து பார்த்துக்
கொண்டிருந்தார்.     கப்பல்,   மேற்கொண்டும் ஐந்து நிமிட நேரம்