பக்கம் எண் :

நேட்டால் சேர்தேன்125

Untitled Document
காத்திருக்க உத்தரவிட்டார்.      கப்பலுக்கு அருகே மற்றொரு படகு
இருந்தது. அதை          எனக்காக ஒரு நண்பர், பத்து ரூபாய்க்கு
அமர்த்தினார். அதிகப் பளு  ஏற்றப்பட்டிருந்த படகிலிருந்து என்னை
இப்படகு ஏற்றிக்கொண்டது.        ஏணியையோ இதற்குள் உயர்த்தி
விட்டார்கள்.          ஆகையால் என்னைக் கயிறுகொண்டு மேலே
தூக்கினார்கள். உடனே கப்பலும் கிளம்பிவிட்டது.  மற்ற பிரயாணிகள்
ஏற முடியவில்லை. காப்டன் செய்த எச்சரிக்கை,    அப்பொழுதுதான்
எனக்குப் புரிந்தது.

     லாமுக்கு அடுத்த       துறைமுகம், மொம்பாஸா. அதன் பிறகு
ஜான்ஸிபார் போய்ச் சேர்ந்தோம். அங்கே     அதிக காலம் - எட்டு
அல்லது பத்து நாள் வரை -   தங்கினோம். பிறகு மற்றொரு கப்பலில்
ஏறினோம்.

     கப்பல் காப்டன் என்னிடம்  அதிகப்பிரியம் கொண்டு விட்டார்.
ஆனால், அந்தப் பிரியம்           விபரீதமான முடிவில் கொண்டு
போய்விட்டது. ‘உல்லாசமாகக்     கரைக்குப் போய் வரலாம்’ என்று
என்னையும் ஓர் ஆங்கில         நண்பரையும் அவர் அழைத்தார்.
அவருடைய           படகிலேயே நாங்கள் கரைக்குப் போனோம்.
‘உல்லாசமாகப்  போய் வரலாம்’ என்றால் இன்னது என்பதைப் பற்றி
எனக்கு எதுவுமே தெரியாது.        இத்தகைய விஷயங்களில் நான்
எவ்வளவு அனுபவம் இல்லாதவன் என்பதும் காப்டனுக்குத் தெரியாது.
ஒரு தரகன் எங்களை நீக்கிரோப் பெண்களின் வீட்டிற்கு அழைத்துச்
சென்றான். அங்கே எங்கள்     ஒவ்வொருவருக்கும் ஓர் அறையைக்
காட்டி, உள்ளே போகச் சொன்னான்.      நான் உள்ளே போனதும்
வெட்கத்தால் வாய் பேசாமல் அப்படியே நின்றேன். என்னைப் பற்றி
அப்பெண் என்ன      நினைத்திருப்பாள் என்பது ஆண்டவனுக்கே
தெரியும். காப்டன் அழைத்ததும்      நான் போனபடியே வெளியே
வந்துவிட்டேன்.      ஒரு பாவமும் செய்யாத என் நிலையை அவர்
தெரிந்து கொண்டார். எனக்கு      முதலில் அவமானமாக இருந்தது.
ஆனால், அக்காரியத்தை நினைப்பதும் எனக்குப் பயமாக இருந்ததால்
அவமான உணர்ச்சி மறைந்தது.    அப்பெண்ணைப் பார்த்ததும் என்
புத்தி தடுமாறிவிடாமல்     இருந்ததைக் குறித்துக் கடவுளுக்கு நன்றி
செலுத்தினேன். எனக்கு இருந்த    பலவீனத்திற்காக என்னை நானே
வெறுத்தேன். அறைக்குள் போக மறுத்துவிடும்    துணிச்சல் எனக்கு
இல்லாது போனதைக் குறித்து எனக்கு       நானே பரிதாபப்பட்டுக்
கொண்டேன்.

     என்னுடைய       வாழ்க்கையில்      ஏற்பட்ட இதுபோன்ற
சோதனைகளில் இது மூன்றாவதாகும்.        இளைஞர்களில் பலர்,
ஆரம்பத்தில் ஒரு பாவமும் அறியாதவர்களாக இருந்தும், அவமானம்
என்று தவறாக ஏற்பட்டுவிடும்          உணர்ச்சியின் காரணமாகப்
பாவத்திற்கு      இழுக்கப்பட்டு விடுகின்றனர். இதில் தவறிவிடாமல்