பக்கம் எண் :

128சத்திய சோதனை

Untitled Document
அவைகளிலிருந்து ஏராளமான    உதாரணங்களை உடனுக்கு  உடன்
கூறுவார்.     அவருடன் பழகியதால் இஸ்லாம் மார்க்கத்தைப்  பற்றி
நன்றாகத் தெரிந்துகொண்டேன். நாங்கள் இருவரும் நெருங்கிப்  பழக
ஆரம்பித்த பிறகு,       சமய விஷயங்களைக்குறித்து நீண்ட நேரம்
விவாதித்தும் வந்தோம்.

     நான் நேட்டாலுக்கு வந்த இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ,
என்னை டர்பன்    நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே
என்னைப்    பலருக்கு   அறிமுகம்         செய்து வைத்துத் தம்
வக்கீல்களுக்குப்      பக்கத்தில் என்னை       உட்கார வைத்தார்.
மாஜிஸ்டிரேட்டோ,     என்னை வெறிக்கப்    பார்த்துக் கொண்டே
இருந்தார். கடைசியாக என் தலைப்பாகையை எடுக்கும்படி  கூறினார்.
நான் எடுக்க மறுத்து,    கோர்ட்டிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.
ஆகவே, இங்கும் எனக்குப்    போராட்டம் காத்துக் கொண்டிருந்தது.

     இந்தியர்களில்   சிலர்  மட்டும்  தங்கள்    தலைப்பாகையை
எடுத்துவிடவேண்டும்  என்று    ஏன் வற்புறுத்துகின்றனர் என்பதை
அப்துல்லா சேத்     எனக்கு விளக்கிச் சொன்னார். முஸ்லிம் உடை
தரிப்பவர்கள் மாத்திரம்   தலைப்பாகைகளை வைத்துக் கொள்ளலாம்
என்றும், மற்றவர்கள்   தலைப்பாகையை எடுத்துவிடுவது வழக்கமாக
நடந்து வருகிறது என்றும் சொன்னார்.

     இந்த   நுட்பமான    பாகுபாடு புரியும்படி செய்வதற்குச் சில
விவரங்களை நான் கூற வேண்டியிருக்கிறது.   அங்கிருந்த இந்தியர்,
பல்வேறு கோஷ்டிகளாகப்      பிரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை
இரண்டு மூன்று நாட்களிலேயே தெரிந்து கொண்டேன்.  அவர்களில்
ஒரு பிரிவு,   முஸ்லிம்      வர்த்தகர்களைக் கொண்டது. அவர்கள்
தங்களை,     ‘அராபியர்’ என்று சொல்லிக் கொண்டனர்.  மற்றொரு
பிரிவினர், ஹிந்து குமாஸ்தாக்கள். பார்ஸி குமாஸ்தாக்களின்  பிரிவும்
இருந்தது.   ஹிந்து     குமாஸ்தாக்கள்   ‘அராபிய’ருடன்  சேர்ந்து
கொண்டாலன்றி, ‘இங்குமில்லை, அங்குமில்லை’ என்பதே   அவர்கள்
கதியாக இருந்தது. பார்ஸி குமாஸ்தாக்களோ, தங்களைப் பாரஸீகர்கள்
என்று சொல்லிக் கொண்டனர்     இந்த மூன்று பிரிவினருக்குள்ளும்
சில    சமூக உறவுகள்   இருந்தன.  இவர்களைத் தவிர    பெரிய
பிரிவினராக    இருந்தவர்கள்,   ஒப்பந்த    தொழிலாளர்களாகவும்,
சுயேச்சையான தொழிலாளராகவும் இருந்த தமிழரும்,    தெலுங்கரும்,
வடஇந்தியரும் ஆவர். ஐந்து ஆண்டுகள் வேலை   செய்வது என்ற
ஒப்பந்தத்தின் பேரில்     நேட்டாலுக்குச் சென்றவர்களே ஒப்பந்தத்
தொழிலாளிகள். ‘கிரிமிதியர்’ என்று இவர்கள் சொல்லப்படுகின்றனர்.
‘எக்ரிமென்ட்’ என்ற ஆங்கிலச் சொல்     ‘கிரிமித்’ என்று திரிந்து,
அதிலிருந்து ‘கிரிமிதியர்’ என்று ஆகியிருக்கிறது. இந்தியர்களுக்குள்
இருக்கும் மற்ற     மூன்று பிரிவினருக்கும், இவர்களிடம் வர்த்தகத்
தொடர்பைத் தவிர வேறு        எந்தவிதமான தொடர்பும் இல்லை.
பெரும்பான்மையான