பக்கம் எண் :

சில அனுபவங்கள்129

Untitled Document
இந்தியர்கள், தொழிலாளர் வகுப்பையே சேர்ந்தவர்கள்.   ஆகையால்,
ஆங்கிலேயர்கள் அவர்களைக் ‘கூலிகள்’ என்றே அழைத்து வந்தனர்.
எல்லா       இந்தியர்களுமே   ‘கூலிகள்’ அல்லது ‘சாமிகள்’ என்று
அழைக்கப்பட்டனர்.    ‘சாமி’      என்பது தமிழர்களின் பெயர்கள்
பலவற்றிற்கு   விகுதியாக இருப்பது.   ‘ஸ்வாமி’   என்ற சமஸ்கிருதச்
சொல்லின் திரிபே ‘சாமி’. அச்சொல்லின் பொருள் ‘எஜமான்’ என்பதே.
ஆகையால், தம்மை ஓர் ஆங்கிலேயர், ‘சாமி’ என்று கூப்பிடும் போது
இந்தியர்    யாருக்காவது    ஆத்திரம் உண்டானால்,   அவருக்குப்
புத்திசாலித்தனமும்    இருந்தால்,  இவ்வாறு  ஒரு பதிலைச் சொல்லி
வாயடைத்து விடுவார்;   “என்னை, ‘சாமி’ என்று   நீர் கூப்பிடலாம்.
ஆனால்,  ‘சாமி’ என்பதற்கு ‘எஜமான்’ என்பது பொருள்.  நான் உம்
எஜமான் அல்லவே!”     என்பார்.      இதைக்     கேட்டுச் சில
ஆங்கிலேயர்கள்    வெட்கிப்போவார்கள்.  மற்றும்       சிலரோ,
கோபமடைந்து திட்டுவார்கள்; சமயம் நேர்ந்தால் அடித்தும் விடுவர்.
ஏனெனில் ‘சாமி’ என்ற சொல்,    இழிவுபடுத்தும் சொல்லைத் தவிர
அவர்களைப் பொறுத்தவரை வேறு எதுவும் இல்லை. அச்சொல்லுக்கு
‘எஜமான்’ என்ற பொருளைக் கூறுவது, அவர்களை அவமதிப்பதற்குச்
சமம்!

     ஆகவே, என்னைக் ‘கூலி பாரிஸ்டர்’ என்றே  அழைத்தார்கள்.
வர்த்தகர்களும், ‘கூலி வர்த்தகர்கள்’     என்றே அழைக்கப்பட்டனர்.
இவ்விதம், ‘கூலி’ என்ற       சொல்லுக்கு உரிய உண்மைப் பொருள்
மறைந்துபோய்,   அது எல்லா இந்தியருக்கும்      ஓர் அடைமொழி
ஆகிவிட்டது.   இவ்விதம்    அழைக்கப்படுவதைக்கேட்டு,  முஸ்லிம்
வர்த்தகர்   ஆத்திரம் அடைவார்.   ‘நான் கூலியல்ல,  அராபியன்!”
என்பார். அல்லது,     ‘நான் ஒரு வியாபாரி’ என்பார். ஆங்கிலேயர்
மரியாதை தெரிந்தவராக இருந்தால்,   தாம் தவறாக   அழைத்ததற்கு
மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவார்.

     தலைப்பாகை வைத்துக்கொள்ளும் விஷயம் இந்த நிலைமையில்
மிகமுக்கியமான ஒன்றாக ஆயிற்று.        பிறர் உத்தரவிடுகிறார்கள்
என்பதற்காக   ஒருவர்,   தமது   இந்தியத்      தலைப்பாகையைக்
கழற்றிவிடுவது  என்பது     அவமதிப்புக்கு உடன்படுவதாக ஆகும்.
ஆகவே,         இந்தியத் தலைப்பாகையை அணிவதை அடியோடு
விட்டுவிட்டு,ஆங்கிலத் தொப்பி போட்டுக்கொள்ளுவதே மேல்  என்று
நினைத்தேன்.    அப்படிச்   செய்துவிட்டால்   அவமதிப்பிலிருந்தும்,
விரும்பத்தகாத      விவாதங்களிலிருந்தும்    தப்பித்துக்கொள்ளலாம்
என்றும் கருதினேன்.

     ஆனால், இக்கருத்தை அப்துல்லா சேத் ஒப்புக்கொள்ளவில்லை.
“நீங்கள்   அவ்விதம்     ஏதாவது     செய்வீர்களானால் அதனால்
பெருந்தீங்கே   விளையும்.   இந்தியத்  தலைப்பாகையை அணிந்தே
தீருவோம் என்று வற்புறுத்தி வருபவர்களை நீங்கள்